ஜோஹோ இமெயிலுக்கு மாறிய அமித்ஷா - டிரெண்டுக்கு நீங்களும் மாறுங்க!

Amit Shah ZOHO : ஜோஹோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்கு ஜோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, பதிவு ஒன்றை வெளியிட்டு நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Home Minister Amit Shah Switched To Zoho EMail
Home Minister Amit Shah Switched To Zoho EMail
1 min read

சுதேசி ஆதரிப்பில் இந்தியா

Home Minister Amit Shah Switched To Zoho E-Mail : இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விதிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த தயாரிப்புகளுக்கு மாற்றாக இந்திய தயாரிப்புகளை நமது நாட்டினர் அனைவரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஜோஹோ நிறுவனத்தின் மீது இந்தியர்களின் கவனம் திரும்பி உள்ள நிலையில், ஜோஹோ இமெயில், அரட்டை செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

அரசியல் தலைவர்கள் ஆதரிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, டாக்குமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட்ஸ் மற்றும் பிரசன்டேஷன் தயாரிக்க மைக்ரோசாப்டுக்கு பதிலாக இந்திய தளமான ஜோஹோவுக்கு மாறியதாக அறிவித்து இருந்தார். மத்திய கல்வி அமைச்சகமும், அலுவலகத்தில் ஜோஹோ தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜோஹோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜோஹோவில் அமித்ஷா

ஜோஹோவில் இணைந்துள்ளதாக அமித்ஷா வெளியிட்ட பதிவில்: ஜோஹோ இமெயிலுக்கு மாறிவிட்டேன். எனது இமெயில் முகவரி மாற்றத்தை குறித்து கொள்ளுங்கள். எனது புதிய இமெயில் முகவரி amitshah.bjp@zohomail.in. எனவும் எதிர்காலங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு இந்த முகவரியை பயன்படுத்துங்கள். இந்த விஷயத்திற்கு கவனம் செலுத்தியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு

அமித்ஷாவின் ஜோஹோ உபயோகத்திற்கு நன்றி தெரிவித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு(Sridhar Vembu ZOHO) எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும் இந்த தருணத்தை ஜோஹோவில் 20 ஆண்டுக்கும் மேலாக கடுமையாக உழைத்த எங்கள் பொறியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

மேலும் படிக்க : கல்வித்துறையிலும் காலடி பதித்த ஸோஹோ ஆஃபீஸ் சூட்! தொடர் வெற்றி!

ஜெய்ஹிந்த். ஜெய் பாரத்

அவர்களுக்கு நம்பிக்கை இருந்த காரணத்தினால், இத்தனை ஆண்டுகள் அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்து இத்தனை ஆண்டுகள் உழைத்தனர். அவர்களின் நம்பிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த். ஜெய் பாரத் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in