கவனம் ஈர்த்திருக்கும் மூன்று முக்கிய போராட்டங்கள்
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நாடாளுமன்றம் நோக்கிய போராட்டம் , மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மற்றும் பன்னா மாவட்டங்களின் எல்லையில் பாயும் கென் (Ken) நதியின் உபரி நீரை, வறட்சியால் தவிக்கும் பெட்வா (Betwa) நதிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'சிதா அந்தோலன்' போராட்டம் ஒரு பக்கம்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை விரிவாக்க திட்டத்திற்காக 3,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக தொடரும் பிளாக் ஹரேலா போரட்டம் இப்படியாக மூன்று முக்கிய போரட்டங்கள் இந்தியாவில் கவனம் பெற்றுள்ளது
மூன்று முக்கிய போரட்டங்கள் குறித்த முழு விவரம்
1, டெல்லியில் நீட் முறைகேடுக்கு எதிராக தொடரும் , சிஜேபி கட்சியின் போராட்டம்
டெல்லி ஜந்தன் மந்தரில் நீட் முறைக்கேடு தொடர்பாக , மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக் வேண்டும் என கூறி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போரட்டத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் , சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக்கும் இணைந்து 20 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரதத்தை மெற்கொண்டுள்ளர் ,
இந்த நிலையில் சிஜேபி கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றுள்ளது பூதகரமான போரட்டமாக வெடித்துள்ளது
2, மத்தியபிரதேசத்தில் நதி இணைப்பு திட்டத்திற்கு எதிராக தொடரும் சிதா அந்தோலன் போராட்டம்
இரண்டாவதாக மத்தியப் பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், 17 நாட்களாகத் தொடர்ந்து அனல் பறந்து கொண்டிருக்கிறது 'சிதா அந்தோலன்' (Chita Andolan) போராட்டம்
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மற்றும் பன்னா மாவட்டங்களின் எல்லையில் பாயும் கென் (Ken) நதியின் உபரி நீரை, வறட்சியால் தவிக்கும் பெட்வா (Betwa) நதிக்குக் கொண்டு செல்லும் இந்தியாவின் முதல் பெரும் நதிகள் இணைப்புத் திட்டமான "கென்-பெட்வா இணைப்புத் திட்டம்" (Ken-Betwa Link Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் ₹44,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த 'தௌதான் அணை' (Daudhan Dam) மற்றும் கால்வாய்ப் பணிகளுக்காக, இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் சுமார் 24 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பன்னா புலிகள் காப்பகத்தின் (Panna Tiger Reserve) பெரும் பகுதியும் இதனால் பாதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ,அங்குள்ள பழங்குடியினப் பெண்கள் சத்தர்பூரின் பரானா ஆற்றுப் படுகையில் எரியும் விறகுச் சிதைகள் போல அமைக்கப்பட்ட மரக்கட்டைகளின் மீது படுத்து போராடி வருகின்றனர்
3. உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டப்படுவதற்கு எதிராக தொடரும் போராட்டம்
மூன்றாவதாக உத்தரகாண்ட் மாநிலத்தின் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக 3,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக அஙகுள்ள மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் மரங்களையும் பசுமையையும் கொண்டாடும் உத்தரகாண்டின் வருடாந்திர ஹரேலா திருவிழா சிறப்பாக நடைப்பெறும் நிலையில், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'பிளாக் ஹரேலா என்று அழைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
அப்பகுதி ஏற்கனவே சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்கதாக உள்ளது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிடும் நிலையில் , இவ்வாறான அதிகமான மரங்களை வெட்டும் பட்சத்தில் , அது சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் , வனவிலங்குகளின் வாழ்வியலை கேள்விகுறியாக்கியுள்ளது என்று கூறி போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்
இப்படி இந்தியாவில் மூன்று முக்கிய போராட்டங்கள் நடந்து வருகிறது, இதற்கு தீர்வுகள் எட்டப்படுமா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
=========================