40 வயதை நெருங்கி விட்டீர்களா? : ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ இவற்றை செய்தாலே போதும்!

40 வயதை நெருங்குபவர்கள் மற்றும் 40களில் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழப் பின்பற்ற வேண்டியவை.
Guidelines for those approaching or in their 40s to live a long and healthy life.
Guidelines for those approaching or in their 40s to live a long and healthy life.source:Ai generated
2 min read

40 வயதில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஒரு மனிதனின் வாழ்க்கையில் 40 வயது என்பது மிக முக்கியமான காலகட்டமாகும். 40 வயதை நெருங்கும் போதோ அல்லது 40களில் கால் பதிக்கும் போதோ நம் உடலில் வளர்சிதை மாற்றங்கள் பெருமளவில் மாறுபடத் தொடங்குகின்றன.

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம்

இந்த மாற்றங்களால் பலவிதமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. எனவே, நீண்ட ஆயுளுடனும் நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வுடனும் வாழ, இப்போதிலிருந்தே உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நாற்பதைத் தொட்டவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ:

1. உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்

தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வழக்கமான நடைப்பயிற்சியுடன் (Walking), உடலை வலிமையாக்கும் லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது நல்ல பலன் தரும்.

உணவில் கவனம்

உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் , நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைப்பதோடு காஃபின், ஆல்கஹால் மற்றும் புகையிலைப் பழக்கங்களைத் தவிப்பது அவசியமாகும்.

2. உடல் எடை மற்றும் தூக்க மேலாண்மை

உடல் எடையை உயரத்திற்கு ஏற்றவாறு சரியாகப் பராமரிப்பது பல நாள்பட்ட நோய்களிலிருந்து நம்மைக் பாதுகாக்கும். இதற்குச் சரியான உணவுப் பழக்கவழக்கமும், தொடர் உடற்பயிற்சியும் இன்றியமையாதது.

மேலும், உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெற நாள் ஒன்றுக்குக் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியமாகும்.

3. மன அழுத்தத்தைக் குறைத்தல் & மருத்துவப் பரிசோதனைகள்

40 வயதில் குடும்பம் மற்றும் வேலை காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனைச் சரியாகக் கையாள யோகா, தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு போன்றவற்றை அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முடிந்தால் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, பெற்றோர்களுக்கு ஏதேனும் மரபுவழி நோய்கள் இருந்தால், முன்கூட்டியே பரிசோதனை செய்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

4. புதிய திறன்களைக் கற்றலும் நிதி மேலாண்மையும்

வேலை செய்பவர்கள் தங்களது தொழில் சார்ந்த புதிய திறன்களைக் கற்றுக் கொள்வது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்து நினைவாற்றலை மேம்படுத்தும்.

ஓய்வு காலத்திற்கு பிறகு

அதுமட்டுமின்றி, முறையான நிதி மேலாண்மை மூலம் வரவை அதிகமாக்கி, செலவைக் குறைக்க பழக வேண்டும். இதுவரை சேமிப்புப் பழக்கம் இல்லாதவர்கள், ஓய்வுக் காலத்திற்காக இப்போதிலிருந்தே சேமிக்கத் தொடங்க வேண்டும்.

இன்னும் 10-15 ஆண்டுகள் உழைக்க வேண்டிய சூழல் இருப்பதால், திறன்களை வளர்த்துக் கொண்டு உயர் பதவிக்கோ அல்லது சொந்தத் தொழிலுக்கோ முயற்சி செய்யலாம்.

5. சமூக உறவுகள்

தனிமையைத் தவிர்த்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள். இது உங்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கூடுதல் நம்பிக்கையுடன் வாழ வைக்கும்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in