UPSE Results 2026 Rank Holders in Tamil Nadu : ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தேர்வு
1,087 காலி பணியிடங்களுக்குக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது . ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்ற நிலையில் .நேர்முகத்தேர்வானது கடந்த மாதம் நடந்து முடிந்தது .
தேசிய அளவில் இரண்டாம் இடம்
வெளியான முடிவுகளின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1087 காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :UPSE Results 2026 : யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்திற்கு இரண்டாம் இடம்
வெற்றி குறித்து பகிர்ந்துகொண்ட மாணவி
போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தேன். 7 ஆண்டுகள் தொடர் முயற்சி, உழைப்புக்கு தற் போது வெற்றி கிடைத்துள்ளதாகவும் எனது பெற்றோர் அளித்த ஊக்கத்தால் என்னால் சாதிக்க முடிந்தது எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டமும் இதற்கு உறுதுணையாக இருந்ததும் என்றும் மண் நெகிழ்ந்து பேசினார்.
இந்த தேர்வில் அனுஜ் அக்னிகோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆகான்ஷ் துல் என்பவர் மூன்றாம் இடம் பிடித்தார் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது