Can healthy people also have a heart attack? What are the symptoms and how to prevent it?
Can healthy people also have a heart attack? What are the symptoms and how to prevent it?source: google

ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுமா?

Healthy People Heart Attack Symptoms in Tamil : ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுமா என்றால் அதற்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்
Published on

எந்த வயதிலும் மாரடைப்பு

Healthy People Heart Attack Symptoms in Tamil : இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லா வயதினருக்கும் மிக எளிதில் வருகிறது.

ஒருவர் நன்கு உடற்பயிற்சி செய்கிறார், தகுந்த உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் மிக கவனமாக இருக்கிறார்.

ஆனாலும் அவருக்கு மாரடைப்பு ஏற்படுமா என்றால் அதற்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரோக்கியமானவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட காரணம்

மாரடைப்பு ஏற்பட சில நேரங்களில் மரபு வழி காரணிகளும் காரணமாக இருக்கலாம்.

குடும்பத்தில் முந்தைய தலைமுறையில் யாருக்கேனும் இதய நோய் இருந்தால், ஆரோக்கியமாக இருந்தாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிகப்படியான சர்க்கரை

Hidden Diabetes என்று சொல்லப்படுகிற சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், அது இரத்த நாளங்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், உடலில் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்று மற்றும் அழற்சியானது இதயத் தமனிகளில் பிளேக் உருவாவதை அதிகப்படுத்துகிறது.

அதீத உடற்பயிற்சி

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கேன், அல்லது உடல் எடையை இத்தனை நாட்களுக்குள் குறைத்துக் காட்டுகிறேன் என திடீரென உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

சிறு வயதிலேயே ஏதேனும் இதயம் சார்ந்த பிரச்னைகள் இருந்தால் அதுவும் மாரடைப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதனால், சிறுவயதில் தான் எனக்கு இதய பாதிப்பு இருந்தது இப்போது நன்றாகத்தான் இருக்கிறேன் என அசாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

அவ்வப்போது உங்கள் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சையை பெற வேண்டும்.

ஆரோக்கியம்

முதலில் ஆரோக்கியம் என்பது என்ன என்றால் அனைவரும் சற்று யோசிக்கத் தொடங்கி விடுவோம்.

எனக்கு உடலில் எந்த பிரச்சனையும் தொந்தரவும் இல்லை . நான் மருத்துவமனைக்கு சென்றே பல ஆண்டுகள் ஆகிவிட்டது, அதனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பார்கள். அவர்களின் பார்வை முற்றிலும் தவறு.

உடல் ஆரோக்கியம்

ஏனென்றால், உடலின் வெளிப்புறத்தில் ஆரோக்கியம் என்பது கிடையாது, ஆரோக்கிய விஷயத்தில் உடலின் உட்பகுதியே மிகவும் இன்றியமையாதது.

அதனால் ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அளவான உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, சரியான தூக்கம், மன அழுத்த மேலாண்மை இவற்றை எப்போதும் முறைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மாரடைப்பு: முக்கிய அறிகுறிகள்

தொடர்ந்து நெஞ்சுப் பகுதியில் வலி, அழுத்தம், இறுக்கம். திடீரென அதிக படியான வியர்வை வெளியேறுதல், மூச்சுத் திணறல்.

எப்போதும் சோர்வாக இருப்பது, மயக்கமாக இருப்பது, கழுத்து, தாடை முதுகுப் பகுதி, இடது கையில் வலி ஏற்படுதல். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அச்சம் கொள்ள வேண்டாம்

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். கை, கால் வலி என மேலே சொன்ன வலிகளும், அறிகுறிகளும்கூட இருக்கலாம். அதற்காக நமக்கும் மாரடைப்பு வந்துவிடுமோ என்று அச்சம் கொள்ளக்கூடாது.

சில நேரங்களில் பொதுவான, மற்ற நோய்களுக்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சையினை வழங்குவார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in