வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்பாட்டில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்! யாரெல்லாம் இனி பயன்படுத்த முடியாது தெரியுமா..?

மத்திய அரசின் சிம் பைண்டிங் விதியால் 2027 ஜனவரி 1 முதல் சிம் கார்டு இல்லாமல் வைஃபை மூலம் வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்துவதில் மாற்றங்கள் வரவுள்ளன.
Central Government SIM Binding Rules WhatsApp Telegram
Central Government SIM Binding Rules WhatsApp Telegramsource:ai generated
1 min read

Central Government SIM Binding Rules WhatsApp Telegram

மத்திய அரசின் புதிய உத்தரவு

மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) இணையவழி மோசடிகள் மற்றும் போலி கணக்குகள் வாயிலாக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் 'சிம் பிணைப்பு’ எனும் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவாக 2026 டிசம்பர் 31 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்பரிமாற்ற செயலிகளில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

'சிம் பிணைப்பு’ என்றால் என்ன?

இதுவரை ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் கணக்கைத் தொடங்கிய பிறகு, அந்த சிம் கார்டு போனில் இல்லாவிட்டாலும் வைஃபை மூலமாக செயலிகளைப் பயன்படுத்த முடிந்தது.

ஆனால், புதிய விதிமுறையின் கீழ்:

பதிவு செய்யப்பட்ட கணக்கின் சிம் கார்டு கண்டிப்பாக அந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

சரிபார்க்கப்பட்ட சிம் கார்டு போனில் இல்லாத பட்சத்தில், வெறும் வைஃபை இணைப்பை மட்டும் வைத்துக்கொண்டு வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் செயலிகளைப் பயன்படுத்த முடியாது.

இதன் மூலம், தவறான நபர்கள் பிறர் எண்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவது முற்றிலும் தடுக்கப்படும்.

யாருக்குப் பாதிப்பு எழும்?

பதிவு செய்த சிம் கார்டை போனில் போடாமல், வேறு போன்களில் அந்த எண்ணின் வாட்ஸ்ஆப் கணக்கை வைஃபை மூலம் பயன்படுத்துபவர்களுக்கு சேவை பாதிப்பு ஏற்படலாம்.

சிம் கார்டு இல்லாமல் டேப்ளெட்கள் அல்லது வைஃபை சாதனங்களில் மட்டும் மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துவோர் இனி உரிய சிம் கார்டைப் பொருத்த வேண்டியிருக்கும்.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளின் புதுப்பிப்பு

இந்த தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப, ஆப்பிள் (iOS) நிறுவனம் தனது செப்டம்பர் மாத மென்பொருள் புதுப்பிப்பில் (Software Update) 'சிம் பிணைப்பு’ வசதியை ஆதரவு செய்யும் மாற்றங்களை செய்துள்ளது.

அதேபோல், ஆண்ட்ராய்டு போன்களிலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் 'சிம் பிணைப்பு’ அம்சத்திற்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

கட்டுப்பாடுகளின் முதன்மை நோக்கம்

போலி எண்கள், வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் இந்திய மொபைல் எண்களைப் பயன்படுத்தி நடைபெறும் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) போன்ற குற்றங்களைத் தடுப்பதே மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in