

EPFO said that if the inactive account has less than Rs 1000, it will be credited to the subscriber's account:
மூன்று ஆண்டுகளாக நீண்ட காலம் செயல்படாத பி.எப். கணக்கில் 1000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
EPFO-கட்டாய சமூகப் பாதுகாப்பு சேமிப்புத் திட்டம்
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் எதிர்கால நலனுக்காக, அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு பகுதியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் சேர்த்து, EPFO மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு கட்டாய சமூகப் பாதுகாப்பு சேமிப்புத் திட்டமாகும்.
நிதி பாதுகாப்பு
EPFO சிறந்த வட்டி விகிதத்துடன், பணியாளர் பணி ஓய்வு பெற்றவுடன் அல்லது அவசரத் தேவைகளுக்கு நிதி பாதுகாப்பையும் வழங்கி வருகிறது.
EPFO வட்டி
அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் பிஎஃப் கணக்கில் உள்ள தொகையின் மீது ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படுகிறது. பின்னர் பயனாளிக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்கப்படுகிறது.
முழுமையான தொகையை ஓய்வு பெற்ற பின்னர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பாக அவசர காலங்களில் வீடு கட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, உடல்நிலை குறைவு முதலானவற்றிற்காகவும் பகுதி பகுதியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
EPFO புதிய நடைமுறைகள்
EPFO பணம் பெறுவதற்கு ஏடிஎம் முறையை கொண்டுவருவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் EPFO -வில் பணம் எடுக்க 7 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ரும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் தொடர்பான திட்டத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகமும் மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது.
வங்கிக் கணக்கில் நேரடி பணம்
அதன்படி நீண்ட காலம் செயல்படாத பி.எப். கணக்கில் 1000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
செயல்பாட்டில் இல்லாத கணக்கு
3 ஆண்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத EPFO கணக்கில் பங்களிப்போ பரிவர்த்தனையோ இல்லாவிட்டால் அந்த கணக்கு செயல்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற கணக்குகளில் 1000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், பயனாளிகள் கோரிக்கை வைக்கவோ அல்லது ஆவணங்களை சமர்ப்பிக்கவோ தேவையில்லை நேரடியாக சந்தாதாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உரிமை கோராத பணம் ரூ.600 கோடி
EPFO புள்ளி விவரப்படி செயல்பாட்டில் இல்லாத EPFO கணக்குகள் மொத்தம் 31.86 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 லட்சம் செயல்படாத கணக்குகள் உள்ளது. இவற்றில் 1000 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள கணக்குகளில் மட்டும் சுமார் ரூ.600 கோடி உரிமை கோராமல் உள்ளதாக தெரிகிறது.