”2026ல் ஸ்மித் மச்சார், 1986ல் உயிர்த்தியாகம் செய்த நீரஜா பானோட்” : இந்தியாவின் பெருமையை உயர்த்திய தீரர்கள்..!

ஃபிளை துபாய் விமானத்தில் 174 பேரைக் காப்பாற்றிய ஸ்மித் மச்சாரின் செயலால், 1986-ல் உயிரைக் கொடுத்து பயணிகளைக் காத்த நீரஜா பானோட்டின் தியாகம் நினைவுகூரப்படுகிறது.
Indian Pilot Smith Machar and Neerja Bhanot Flight Rescue History
Indian Pilot Smith Machar and Neerja Bhanot Flight Rescue Historysource:thamizhalai,google
1 min read

Indian Pilot Smith Machar and Neerja Bhanot Flight Rescue History

ஃபிளை துபாய் விமான சம்பவம்

ஃபிளை துபாய் விமானத்தில் பயணித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சார், சக பைலட்டின் தாக்குதலுக்கு ஆளாகி ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையிலும், காக்பிட் கதவைத் திறந்து 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்ற உதவிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது.

40 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்

இதேமாதிரியான சம்பவம் சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் நடந்துள்ளது.

ஸ்மித மச்சாரின் தியாகத்தைத் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே தியாகம் செய்த நீரஜா பானோட்டின் வீரத்தை மீண்டும் நினைவுகூரச் செய்துள்ளது.

1986 பான் அம் பிளைட் 73 கடத்தல்

கடந்த 1986-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி, மும்பையிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற 'பான் அம் பிளைட் 73' போயிங் 747 விமானம், பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அபு நிடால் தீவிரவாத அமைப்பால் கடத்தப்பட்டது.

அந்த விமானத்தில் 379 பேர் இருந்த நிலையில், கடத்தல் தொடங்கியவுடனேயே 22 வயதான தலைமைப் பணிப்பெண் நீரஜா பானோட் காக்பிட் பைலட்களை எச்சரித்தார். இதனால் பைலட்கள் தப்பிக்க, தீவிரவாதிகளால் விமானத்தை வேறு எங்கும் இயக்கி அழிக்க முடியாமல் கராச்சியிலேயே முடங்கியது.

நீரஜாவின் துணிச்சலான சாதுரியம்

அமெரிக்கப் பயணிகளைக் இலக்கு வைக்கத் தீவிரவாதிகள் பாஸ்போர்ட்டுகளை சேகரித்தபோது, நீரஜா தன் உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டுகளை இருக்கைகளுக்கு அடியிலும் குப்பைத் தொட்டிகளிலும் மறைத்து வைத்தார்.

17 மணிநேர போராட்டத்திற்குப் பின்

17 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இருள் சூழ்ந்த நேரத்தில், அவசர கால வெளியேறும் கதவு அருகே இருந்த நீரஜா தான் முதலில் தப்பிக்காமல், உள்ளே சிக்கியிருந்த குழந்தைகளைக் காப்பாற்ற சென்றபோது தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

தேசங்கள் வழங்கிய உயரிய கவுரவம்

நீரஜாவின் தியாகத்தைப் போற்றி இந்தியாவின் மிக உயரிய 'அசோக சக்ரா' விருது அவருக்கு மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற முதல் பெண்ணும், மிகக் குறைந்த வயதுடைய நபரும் அவரே ஆவார்.

மேலும் பாகிஸ்தான் அரசின் 'தம்கா-ஏ-பாகிஸ்தான்' விருதும், அமெரிக்க நீதித் துறையின் 'சிறப்பு தைரிய விருதும்' அவருக்கு வழங்கப்பட்டன. 1986-ல் நீரஜாவும், 2026-ல் கேப்டன் ஸ்மித் மச்சாரும் காட்டிய அசாதாரணத் துணிச்சலே அவர்களை நிஜ நாயகர்களாக மாற்றியுள்ளது.

=========

logo
Thamizh Alai
www.thamizhalai.in