13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி வாட்ஸ் ஆப் : அசத்தலாக அறிமுகப்படுத்திய மெட்டா அறிமுகம்!

Meta Introduces Parents Controlled New WhatsApp for 13 Year Old : 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகளை வாட்ஸ் ஆப் செயலி மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது .
Meta Company Introduces Parents Controlled New Separate WhatsApp for Under 13 Year Old
Meta Company Introduces Parents Controlled New Separate WhatsApp for Under 13 Year Oldsource:google
1 min read

13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வாட்ஸ் ஆப்

Meta Introduces Parents Controlled New WhatsApp for 13 Year Old : பெற்றோர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் பெறப்பட்டு 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக பெற்றோர் நிர்வகிக்கக் கூடிய வாட்ஸ் ஆப் செயலி மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள்

இதன்மூலம் பதிமூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுப்பும் செய்திகள் மற்றும் உரையாடல்களை பெற்றோர் கண்காணிக்க முடியும் வண்ணம் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட உரிமைகளை பெற்றோர் அறிய முடியும்

மேலும் இப்புதிய மாதிரி கணக்கின் மூலம் குழந்தைகளை யார் யார் பின்தொடர்கிறார்கள், தொடர்பு கொள்கிறார்கள் ,அவர்கள் உள்ள குழுக்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புகள் என குழந்தைகளின் முழுமையான விவரங்களை பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும்.

பெற்றோர் கணக்குடன் இணைக்க க்யூஆர் கோட்

இதன்மூலம் யார் யார் குழந்தையைத் தொடர்புகொள்ளலாம், எந்தக் குழுக்களில் அவர்கள் சேரலாம் என்பதைப் பெற்றோரே தீர்மானிக்கலாம். அதுமட்டுமின்றி பெற்றோரின் வாட்ஸ்அப் கணக்குடன் குழந்தையின் கணக்கை க்யூஆர் கோட் மூலம் இணைக்க வேண்டும்.

தற்போதைய வாட்ஸ் ஆப்பில் உள்ள பாதுகாப்பு அமசங்களும்

parents pin எனப்படும் password மூலம் இந்த கணக்குகளை பெற்றோர் நிர்வகிக்கலாம் என்றும், அதனை அவர்கள் மட்டுமே மாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மெட்டா AI , வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்

13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் இந்த வாட்ஸ்அப் கணக்குகளில், மெட்டா AI , வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் அல்லது வாட்ஸ் ஆப் சேனல்களை பயன்படுத்த முடியாது.

மேலும் செய்தியிடல் மற்றும் அழைப்புகளுக்கு மட்டுமே இது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மெட்டா அறிவித்துள்ளது.

பாதுகாப்பான முறையில் வாட்ஸ் ஆப்

இந்த வசதிகள் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்து, பாதுகாப்பான முறையில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த வழிவகை செய்கிறது.

மேலும் இந்த வாட்ஸ் ஆப் கணக்குகள் குழந்தைகளின் 13-வது பிறந்தநாள் வரை இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் மாநில அரசுகள் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலை தளப் பயன்பாட்டு நேரத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மெட்டா 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வாட்ஸ் ஆப் என்ற மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in