5 to 7 நாட்கள் போதும்.. இனி ஈஸியா பாஸ்போர்ட் வாங்கிடலாம்..: புதிய விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு பாஸ்போர்ட் பெறும் வகையில் புதிய விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன.
New rules have come into effect to allow passports to be obtained within five to seven days.
INew rules have come into effect to allow passports to be obtained within five to seven days.source:google
2 min read

indian passport new rules 2026:

பாஸ்போர்ட் முக்கியத்துவம்

வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கும், தனி நபரின் அதிகாரப்பூர்வ அடையாள தேவைகளின் முக்கிய ஆவணமாக இருப்பது பாஸ்போர்ட்.

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது , அதற்கான ஆவணங்களை சரியாக சமர்பிப்பது தான் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் மிகப்பெரிய கவலை.

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் சிக்கல்

ஏனெனில் ஒரு ஆவணம் சரியாக இல்லை என்றாலும் அதற்காக மீண்டும் மீண்டும் பிழைகளை திருத்துவது, புதிதாக வாங்குவது பின்னர் மீண்டும் விண்ணப்பிப்பது என முதலில் இருந்து தொடங்க வேண்டும். இதனால் பாஸ்போர்ட் பெறும் காலமும் நீண்டு கொண்டே செல்லும்.

மத்திய அரசின் புதிய விதிமுறைகள்

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களை மேற்கொண்டு உள்ளது.

அதன்படி பாஸ்போர்ட் பெறும் நடைமுறையில் சேவைகளை துரிதப்படுத்தவும், போலியான ஆவணங்களை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

பிறப்புச் சான்று

முன்னர், பிறப்பு சான்றை நிரூபிக்க பள்ளியில் கொடுக்கப்படும் டிரான்ஸ்பர் சர்பிகேட் போன்ற பிற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால், இப்போது அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, நகராட்சி ஆணையத்தால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதார் கார்டு, பான் கார்டு , வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பயன்படும்;

தனியுரிமை விவரங்கள்

பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில், பெற்றோரின் பெயர், வாழ்க்கை துணையின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.

ஆனால், இனிமேல் கடைசி பக்கத்தில் தந்தை, தாய்,பாதுகாவலர் பெயர்கள் அல்லது வாழ்க்கைத் துணை பெயர் இடம்பெறாது.

விண்ணப்பதாரரின் முகவரி

முகவரிக்காக ஆதார், வங்கி பாஸ்புக், எரிவாயு அல்லது தண்ணீர் ரசீது சமர்ப்பிக்கலாம். மேலும் பழைய முறையில் வீட்டின் முகவரி முழுமையாக அச்சிடப்பட்டிருக்கும்.

ஆனால் புதிய பாஸ்போர்ட்களில் மைக்ரோ சிப் பொருத்தப்படுவதால் இனிமேல், டிஜிட்டல் வசதியுடன் பதியப்படும்.

தேவையான ஆவணங்கள்

முன்னர் நோட்டரி சான்றளிக்கப்பட்ட 15 ஆவணங்கள் தேவை. இப்போது அவை 15 ஆவணங்களில் இருந்து 9 ஆவணங்களாக குறைக்கப்பட்டுள்ளன.

அதனால் இனி நோட்டரி சான்றளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் கட்டாயம் கிடையாது.

திருமணமானவர்கள் விண்ணப்பிக்கும் போது

புதியாக திருமணமானவர்கள் தங்கள் குடும்ப பெயரை மாற்றுவதற்கு இனி திருமணச் சான்று அவசியமில்லை. ஆனால் முன்னர் கட்டாயமாக இருந்தது.

விவாகரத்து ஆனவர்கள் மற்றும் ஒற்றைப் பெற்றோர்

அதேபோல், வாழ்க்கை துணையை இழந்தவர்கள் அல்லது விவாகரத்து செய்தவர்கள் தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவர் பெயர் இருந்தாலே போதுமானது. விவாகரத்து பெற்ற நபரின் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆதார் கட்டாயம்

மேலும் பாஸ்போர்ட் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு ஆதாரைப் பயன்படுத்துவது செயலாக்கத்தை துரிதப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

கால வரையறை

இனி பாஸ்போர்ட் எடுத்தால் பெரியவர்களுக்கு 10 ஆண்டுகள், சிறார்களுக்கு 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தேவையில்லை. காலாவதி ஆவத்ற்கு முன்னர் புதுப்பித்தாலே போதுமானது.

இனி 5 முதல் 7 நாளில் பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் விண்ணப்பம் முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும் பதிவு, ஆவணங்கள் பதிவேற்றம், நேர்முக நேரத் தேர்வு முதலானவை டிஜிட்டல் முறையிலேயே செய்து கொள்ளலாம் .

போலீஸ் வெரிஃபிகேஷன்

மேலும் காவல்துறையினரின் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் பெரும்பாலும் தரவுத்தளத்தின் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய விதிகளின் படி இனி பாஸ்போர்ட் பெற அவசர தேவை உள்ளவர்கள் தட்கல் முறையில் 5 முதல் 7 நாட்களில் பாஸ்போர்ட் பெற முடியும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in