இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் : தமிழ்நாடு தான் NO.1.!
Tamil Nadu is the state with the highest debt in India:
மாநில அரசு கடன்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களது நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக, மாநில வளர்ச்சிப் பத்திரங்களை அதாவது State Development Loans -ஐ பொதுச் சந்தையில் வெளியிட்டு கடன் பெறுகின்றன.
மாநில அரசு கடன் பெறு வழிமுறை
முன்னர் கூறியபடி, மாநில வளர்ச்சிப் பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து நிது பெறப்படுகிறது.
இதில் ரிசர்வ வங்கியானது முகவராக செயல்படுகிறது. இது பொது சந்தை கடன் என அழைக்கப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி
மாநில அரசு தாங்கள் வாங்கிய கடனை முழுமையாக செலுத்தும் வரை, இந்திய அரசமைப்பு சட்டம் , உறுப்பு 293-ன் கீழ் மத்திய அரசின் அனுமதியுடன் மட்டுமே கடன் வாங்க முடியும்.
ரிசர்வ் வங்கியிடம் ஓவர் டிராஃப்ட் முறையிலும், வங்கிகள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்தும் கடன் பெற முடியும்.
கடன் வாங்குவதற்கான முக்கிய காரணம்
மாநில அரசின் வருவாயை விட செலவுகள் அதிகமாக இருக்கும் போது, கடன் வாங்கப்படுகிறது.
மாநில அரசின் இலவச திட்டங்கள், முதியோர் ஊதியம், மானிய திட்டங்கள் போன்ற சமுதாய நலத் திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது, செலவாகிறது.
வட்டி கட்ட மீண்டும் கடன்
பழைய கடன்களை சரிவர திரும்ப செலுத்த முடியாத சூழலில், அதற்கான வட்டி, அசல் திரும்ப செலுத்துவதற்கும் மீண்டும் கடன் பெற வேண்டியுள்ளது.
இந்தியாவிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியல்
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி இந்தியாவிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2020-2021 ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை தமிழ்நாடு தான் அதிக கடன் பத்திரங்களை வெளியிட்டு முதல் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் தமிழ்நாடு
2025-2026 இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடன் வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மொத்த கடன் 9.30 லட்சம் கோடி
மேலும் நடப்பு நிதியாண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையின் படி தமிழ்நாட்டிற்கான மொத்த கடன் நிலுவைத் தொகையானது ரூ. 9.30 லட்சம் கோடி முதல் ரூ.9 .56 லட்சம் கோடி வரை என கிட்டத்தட்ட 9.60 லட்சம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம்
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் உத்திரபிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் மொத்த கடன் சுமார் 8.60 லட்சம் கோடி வரை ஆகும்.
மகாராஷ்ட்ரா
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பது மகாராஷ்ட்ரா தான். இந்த மாநிலத்தின் மொத்த கடன் சுமார் 8.10 லட்சம் கோடி ஆகும்.
கர்நாடகா
மொத்த கடன் சுமார் 7.30 லட்சம் கோடி ரூபாயுடன் கர்நாடக மாநிலம் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தின் மொத்த கடன் சுமார். 7.10 லட்சம் கோடி. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியல் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

