அழிக்க முடியாத ‘தேர்தல் மை’ : விரலில் வைக்கும் ஒரு சொட்டு 'மை'க்குப் பின்னால் இருக்கும் ரகசியம்... முழு விவரம்!

Indelible Election Ink Secret: விரலில் வைக்கும் மை ஏன் அழியாது? - முழு விவரம்!
Indelible ‘Election Ink’: What is the secret behind that single drop of ink applied to the finger?
Indelible ‘Election Ink’: What is the secret behind that single drop of ink applied to the finger?source: google
2 min read

Indelible ‘Election Ink’: What is the secret behind that single drop of ink applied to the finger?

'அழியாத தேர்தல் மை'

ஜனநாயகத் திருவிழாவின் அடையாளமாகத் திகழ்வது வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அந்த 'அழியாத மை' (Indelible Ink). கள்ள ஓட்டுகளைத் தடுக்க உதவும் இந்த மை உருவான கதை மற்றும் அதன் பின்னால் உள்ள அறிவியல் ரகசியத்தைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அழியாத மை - ஒரு வரலாற்று ஆயுதம்

சுதந்திரத்திற்குப் பிறகு 1962-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தான் முதன்முதலில் இந்த மை வைக்கும் நடைமுறையைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.

இன்றுவரை மதிப்பிழக்காத மை

அப்போது குடிமக்களிடம் முறையான அடையாள அட்டைகள் இல்லாததால், முறைகேடுகளைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட இந்த 'ஆயுதம்' இன்றும் தனது மதிப்பை இழக்கவில்லை.

எவ்வளவு தேய்த்தாலும் அழியாதது ஏன்?

இந்த மையின் சிறப்பம்சமே அதன் தனித்துவமான வேதியியல் கலவைதான். இதைக் கண்டுபிடித்தது எம்.எல்.கோயல் தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு.

மையில் நிறைந்துள்ள வேதிப்பொருள்

இதில் சில்வர் நைட்ரேட் ஆல்கஹால் மற்றும் சில நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.

மை செயல்படும் விதம்

விரலில் மை வைத்தவுடன், அதிலுள்ள ஆல்கஹால் காற்றில் ஆவியாகிவிடும். மீதமுள்ள சில்வர் நைட்ரேட் நமது தோலில் உள்ள செல்களுடன் வினைபுரிந்து ஒட்டிக்கொள்ளும்.

மையில் உள்ள அறிவியல் ரகசியம்

இந்த மை வைத்த விரலில் சூரிய ஒளி பட்டவுடன், அது தோலில் நிரந்தரமான கருப்பு நிறக் கறையை உண்டாக்கும்.

செல்களுடன் நேரடியாக இணையும் மை

இது தோலின் மேற்பரப்பில் மட்டும் ஒட்டாமல், செல்களுடனே நேரடியாக இணைந்துவிடுகிறது. எனவே சோப்பு, ஆயில் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு தேய்த்தாலும் போகாது.

மை மறைய எடுத்துக்கொள்ளும் காலம்

விரலில் உள்ள பழைய செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் வளரும் போது மட்டுமே (குறைந்தது ஒரு மாதம்) இந்தக் கறை மெதுவாக மறையும்.

மை தயாரிக்கும் 'ஒரே' நிறுவனம் எது?

இந்தியாவில் இந்த மையைத் தயாரிக்கத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் கர்நாடக மாநில அரசின் கீழ் இயங்கும் "மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்" நிறுவனம் (Mysore Paints and Varnish Limited) ஆகும்.

1962-லிருந்து இந்த நிறுவனம் தான் இந்தியா முழுவதற்கும் மையை விநியோகம் செய்கிறது.

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்தியா மட்டுமின்றி கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து தான் தேர்தல் மை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

டிஜிட்டல் காலத்தில் மையின் அவசியம் என்ன?

தற்போது நம்மிடம் நவீன வாக்காளர் அடையாள அட்டைகள் (Voter ID) இருந்தாலும், கள்ள ஓட்டுகளை 100% தடுக்க இந்த மையே இப்போதும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

வாக்கு செலுத்தியதை உறுதிபடுத்தும் மை

ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன், அவர் ஏற்கனவே வாக்கு செலுத்திவிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் மிக எளிய மற்றும் வலிமையான சான்று விரலில் உள்ள மை கறைதான்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in