

Helicopter Ride on Thiruvannamalai Girivalam :
திருவண்ணாமலை என்று சொன்னாலே அனைவரின் நினைவிற்கும் வருவது அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும், கிரிவலமும் தான்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும் என்பது பக்தர்களின் மிக முக்கிய வேண்டுதல், கனவு எனலாம்.
அண்ணாமலையார் தரிசனம்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்,இளைஞர்கள் , முதியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கிரிவலப்பாதையை வலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வர்.
முதியவர்களின் சிரமம்
ஆனால் வயதில் முதியவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் கிரிவலப்பாதையை சுற்ற முடியாது. ஆனால் இனிமேல் அந்த கவலை முதியவர்களுக்கு இருக்காது என்றே சொல்லலாம்.
திருவண்ணாமலை பற்றிய தகவல்கள்
சரி முதலில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் . அதன் பிறகு Helicopter Ride பற்றி தெரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை நகரத்தைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாதை தான் கிரிவலப் பாதை எனப்படுகிறது. அக்னி தலமான அருணாச்சலேஸ்வரர் மலையைச் சுற்றியுள்ள பாதையை பக்திப் பாதை என்றே சொல்லலாம்.
கிரிவலம் செல்ல ஆகும் நேரம்
கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்றால் அதிகாலை தான். ஆனால் பக்தர்கள் மாலை நேரங்களிலும் செல்கின்றனர். 14 கிலோமீட்டர் தூரம் என்பதால் சராசரி வேகத்தில் நடந்தால் 4 மணி நேரம் வரை ஆகலாம்.
மிகவும் பொறுமையாக நடந்தால் அதைவிட கூடுதலாக 5 முதல் 6 மணி நேரம் ஆகலாம்.
கிரிவலம் செல்லக்கூடிய நாட்கள்
லட்சக்கணக்கான பக்தர்கள் சித்ரா பௌர்ணமி உட்பட மாத பௌர்ணமிகளிலும் அமாவாசை தினங்களிலும் தீபத்திருநாள் போன்ற முக்கிய நாட்களிலும் கிரிவலம் செல்கின்றனர்.
City Ride Helicopter Ride
சிட்டி ரைடு என்ற பெயரில் ஹெலிகாப்டர் ரைடு முதன்முதலாக திருவண்ணாமலையில் அறிமுகமாக உள்ளது.
திருவண்ணாமலை நகரை சுற்றிலும் இந்த சிட்டி ரைடு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Helicopter Ride எப்போது?
இந்த Helicopter Ride எல்லா நாட்களிலும் இருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்.
ஏனென்றால் வரும் பிப். 28 ஆம் தேதி முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை என ஐந்து நாட்களுக்கு மட்டும் தான் ஹெலிகாப்டர் ரைடு இயங்குமாம்.
இந்த நாட்களில் தான் மாசி மாதத்தின் முக்கிய தினமாக கருதப்படும் பௌர்ணம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Helicopter Ride கட்டணம் எவ்வளவு?
தனி நபருக்கு ரூ. 6000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (Tiruvannamalai Girivalam Helicopter Ride Charge). ஒரு வேளை நீங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் குழுவாக முன்பதிவு செய்தால் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
Helicopter Ride
மாசி மாத பௌர்ணமி வரப்போகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் கிரிவல பயணம் மேற்கொள்வர். அந்த நேரத்தில் வாகனங்கள் சாலைகள் இயங்குவதே மிகவும் சிரமமாக இருக்கும். அந்த நேரத்தில் இந்த Helicopter Ride பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிகிறது.
அதேபோல் கிரிவலம் செல்ல முடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கான நல்வாய்ப்பாகவும் இந்த Helicopter Ride இருக்கும் என்று கருதப்படுகிறது.
சோதனை முயற்சியாக
சோதனை முயற்சியாகத் தான் இந்த சிட்டி ரைடு, ஹெலிகாப்டர் ரைடு இயக்கப்படவுள்ளது. அதனால் இதற்கு மக்களிடையே எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் இந்த Helicopter Ride தொடருமா? இல்லை முதல் முயற்சியிலேயே நிறுத்தப்படுமா? என்பது தெரியும்.