

திருப்பதி ஏழுமலையான் கோவில்
Tirupati Darshan Ticket Online Booking WhatsApp Number : ஏழுமலையான் பக்தர்களின் மிகப்பெரிய வருத்தமே திருமலை திருப்பதி டிக்கெட் தான். ஏனென்றால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
அப்படி இருக்கும் போது ஆன்லைனில் திருமலை தரிசன டிக்கெட்டை தேவஸ்தானம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் வெளியிடும்.
தேவஸ்தானம் அறிவிப்பு
அப்படி தேவஸ்தானம் அறிவிக்கும் போது ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால் சிலநேரங்களில் இணையதளம் செயல்படாமல் அப்படியே முடங்கி விடுகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
SSD டோக்கன், தரிசன வரிசை
இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கான ஒரே வழி SSD டோக்கன், தரிசன வரிசை முறை தான். தரிசன வரிசை முறையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
வாட்ஸ் ஆப் மூலம் தரிசன டிக்கெட்
பக்தர்களின் இந்த சிரமத்தை எளிமையாக்கும் விதமாக தற்போது WhatsApp-ல் திருமலை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
WhatsApp-ல் திருமலை தரிசன டிக்கெட்
ஆந்திர அரசு நடைமுறைப்படுத்தியுள்ள இந்த செயலால் இனிவரும் நாட்களில் பக்தர்கள் WhatsApp-ல் திருமலை தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு ஆந்திர அரசு MANA MITRA என்று பெயரிட்டுள்ளது. இந்த திட்டத்தை Whatsapp governance என்றும் கூறுகின்றனர்.
கூடுதல் கோவில்கள்
திருப்பதியைத் தொடர்ந்து அன்னவரம், ஸ்ரீகாளகஸ்தி, சிம்ஹாலம், மல்லேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீசைலம், துவாரகா திருமலை என பல்வேறு கோவில்களுக்கான முன்பதிவு டிக்கெட் விண்ணப்பங்களையும் சேர்க்க திட்டமிட்டு வருகின்றனர்.
இதனால் இனிவரும் நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை.
Whatsapp- ல் விண்ணப்பிப்பது எப்படி?
மன மித்ரா அதிகாரப்பூர்வ Whatsapp எண்ணை ஆந்திர அரசு வழங்கியுள்ளது. 95523 00009 என்ற மன மித்ரா எண்ணை சேமித்துக்கொள்ளவும்.
95523 00009 நம்பருக்கு மெசேஜ்
பின்பு அந்த எண்ணிற்கு ‘ஹாய்’ என அனுப்பவும். உங்கள் குறுந்தகவல் சென்றதும் , கிடைக்கப்பெறும் பட்டியல் விருப்பங்களில் இருந்து ‘ கோவில் முன்பதிவு சேவைகள்’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
மன மித்ரா சாட்பாட் உங்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கும் .
பக்தர்களின் விவரங்கள்
டிக்கெட் புக் செய்ய தேவையான உங்கள் விவரங்களை பதிவிட்டு, பின்னர் அது அறிவுறுத்தும் படி டிக்கெட்டிற்கான பணத்தை செலுத்த வேண்டும்.
பணம் செலுத்தியபின், உங்கள் மின் இ-டிக்கெட் உங்கள் Whatsapp எண்ணிற்கு அனுப்பப்படும். அதனை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
காத்திருக்க தேவையில்லை
இனி திருமலை திருப்பதி தேவஸ்தான அறிவிப்பிற்காக காத்திருந்து, டிக்கெட் கிடைக்காமல் சோர்ந்து போகாமல், ஆந்திர அரசின் மன மித்ரா எண்ணின் மூலம் எளிமையாக உங்கள் Whatsapp எண்ணிலிருந்தே டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம்.
மக்களின் வரவேற்பு
கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி முதலே இந்த நடைமுறையானது இருந்து வருகிறது. எனினும் மன மித்ரா பற்றி அறியாத பக்தர்களுக்காகத்தான் இந்த தகவல்.
கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை 2.64 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே மன மித்ராவிற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அதனால் தான் கூடுதல் கோவிகளையும் சேர்ப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.