போன் மட்டுமல்ல இனி ”டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ்” பார்க்கலாம் : மெட்டா நிறுவனத்தின் புதிய 'Instagram for TV' வசதி!

மெட்டா நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளுக்காக 'Instagram for TV' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கலாம்!
Watch Insta Reels on TV, not just on your phone: Meta's new 'Instagram for TV' feature!
Watch Insta Reels on TV, not just on your phone: Meta's new 'Instagram for TV' feature!source:Ai generated
1 min read

இன்ஸ்டாகிராம் செயலி பயன்பாடு

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படும் முன்னணி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு புத்தம் புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலியில், புகைப்படங்கள் மற்றும் சுவாரசியமான வீடியோக்களைப் பகிர்வதோடு, நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

'Instagram for TV'

இந்நிலையில், பயனர்கள் தங்களது ஸ்மார்ட் டிவிகளிலேயே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்க்கவும், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ஏதுவாக 'Instagram for TV' என்ற புதிய பிரத்யேக வசதியை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

டிவியில் இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

  1. ஸ்மார்ட் டிவியில் உள்ள ஆப் ஸ்டோருக்கு சென்று 'Instagram' எனத் தேடி, செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

  2. செயலியைத் திறந்தவுடன் டிவியின் திரையில் ஒரு QR குறியீடு தோன்றும்.

  3. அந்த QR குறியீட்டை உங்களது மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்வதன் வழியாக, மிக எளிதாக உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிற்குள் லாக்-இன் செய்துகொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இந்த வசதி கிடைக்கும்?

முதற்கட்டமாக, 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு சந்தைக்கு வந்த சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் இந்த வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் திரையைத் தாண்டி, வீட்டில் உள்ள பெரிய திரையில் தங்களுக்கு பிடித்தமான ரீல்ஸ்களை கண்டு ரசிக்கும் இந்த புதிய அம்சம், பயனர்களிடையே மிக அமோகமான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in