

போதிநாள் நினைவுகூறல்
Bodhi Day 2025 Celebration Date in Tamil : பௌத்த மரபுகளில் போதி நாளாக (Bodhi Day) டிசம்பர் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது உலகின் மிகப் பெரிய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சித்தார்த்த கௌதமர் (புத்தர்), ஆழ்ந்த தவத்தின் மூலம் ஞானம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் குறிக்கிறது.
அரச பதவி முதல் ஆன்மிகம்
இளவரசராக இருந்து, இன்பங்களைத் துறந்து, உலகின் துன்பங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டறிந்த புத்தரின் ஞானம், நவீன காலத் தலைமைத்துவம் மற்றும் கொள்கை வகுத்தல், ஆசையை துறப்பது, சுயபரிசோதனை ஆகியவற்றுக்கு இன்றும் மிகப் பொருத்தமானதாக உள்ளது.
மத்திய மார்க்கம் மற்றும் நடுநிலையே புத்தரின் சாரம்
புத்தர் அடைந்த ஞானத்தின் அடிப்படைச் சாரம், மத்திய மார்க்கம் (Middle Way) ஆகும். இது தீவிரமான நிலைகளைத் தவிர்த்து, நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அதிதீவிரமான (Extreme) வலதுசாரி அல்லது இடதுசாரி நிலைப்பாடுகளுக்குச் செல்லாமல், அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் சமநிலைப்படுத்தும் நடுநிலையான, நீடித்த தீர்வுகளை நோக்கி நகர்வது அவசியம் என்பதை இந்த மத்திய மார்க்கம் வலியுறுத்துகிறது என்பது முக்கியமானதாகும்.
புத்தரின் பொன்மொழிகள் மற்றும் போதி நாளை நினைவுகூர்தல்
இதனை நினைவுகூர்ந்து கொண்டாடும் விதமாக, இன்று புத்தரை நினைவுகூர்ந்து அவரின் கூற்றுகளையும் கடைபிடித்து நல்லதொரு பிறநல வாழ்வுக்கு வழிவகுக்கும் விதமாக நாம் வாழ முற்பவேண்டும்.
இந்நிலையில், அவர் கூறிய தவிர்க்க முடியாத கூற்றுகளில் சில"ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்" என்ற புத்தரின் கூற்று, முடிவில்லாத பொருளாதார மற்றும் தனிப்பட்ட பேராசையின் அபாயங்களை உணர்ந்து, சமூகப் பிரச்சினைகளுக்கு ஆழமான உளவியல் மற்றும் தார்மீகத் தீர்வுகளைத் தேடுவதன் அவசியத்தை நினைவுறுத்துகிறது என்றால் மிகையாகாது.
எண்வகைப்பட்ட பாதை (The Eightfold Path) - நெறிமுறையின் வழிகாட்டி
புத்தர் வகுத்த எண்வகைப்பட்ட உன்னதப் பாதை, அரசியல் மற்றும் நிர்வாக நெறிமுறைகளுக்கான ஒரு தெளிவான வழிகாட்டியாகச் செயல்பட முடியும்:
.சரியான எண்ணம் (Right Intention): பொதுநலன், இரக்கம், மற்றும் நேர்மை ஆகியவற்றுடன் செயல்படுவது.
.சரியான பார்வை (Right View): யதார்த்தத்தைப் பிழையின்றிப் புரிந்துகொள்வது. (தரவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் முடிவெடுப்பது).
.சரியான பேச்சு மற்றும் செயல் (Right Speech & Action): பொய், அவதூறு, மற்றும் வன்முறையைத் தவிர்த்து, உண்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துவது என்று அவரின் போதனைகளில் சில.
இதிலும் குறிப்பாக புத்தர் வாழ்வியலுக்கான கூறிய பொன்மொழிகள் பலநூறு இருந்தாலும் அவற்றில் குறிப்பாக சில
1.உங்கள் மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் நீங்களே காரணம்.
2.பத்தாயிரம் மெழுகுவர்த்திகளை ஒரு மெழுகுவர்த்தியால் பற்ற வைக்கலாம், அது அதன் ஒளியைக் குறைக்காது. மகிழ்ச்சியைப் பகிர்வதால் குறைவதில்லை.
3.எதிர்காலம் நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது, கடந்த காலத்தின் மீது அல்ல.
4.கோபத்தை வெல்ல அன்பால் வெல்லலாம், தீமையை அன்பால் வெல்லலாம்.
5.ஒருபோதும் யாரிடமும் சண்டையிடாதீர்கள், ஆனால் உங்களை நீங்களே சண்டையிடாமல் வெல்லுங்கள்.
6.கடந்த காலத்தை நினைத்துக் கவலைப்படாதீர்கள், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுங்கள். நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ முடியும்.
7.நீங்கள் ஒருமுறை கோபப்பட்டால், அது உங்கள் கௌரவத்திற்கு இழுக்கு சேர்க்கிறது. என்று அவரின் பொன்மொழிகளை நினைவுகூர்வதை தாண்டி செயல்படத்தி, நீங்கள் ஞானம் பெற்று வாழுங்கள்.