

பக்தர்களின் கோரிக்கைகளை சரிசெய்யும் தேவசம் போர்டு
Sabarimala Ayyappa Temple Devotees : கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலின் மகர விளக்கு காலம், கடந்த மாதம் 30-ம் தேதி மாலை துவங்கியது. 31 முதல் நெய்யபிஷேகம் துவங்கியது.
மகர விளக்கு பூஜைகள் - குவியும் பக்தர்கள்
அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கேரள அரசு, சபரிமலையில் முறையான வழிமுறைகளை செய்யவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பின்னர், இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம்,கேரள அரசு விரைவில் பக்தர்களின் குறைகளை களைந்து, சில விதிமுறைகளை கூறி அறிவுறுத்தியது.
பக்தர்களுக்கு வழிவகை செய்யும்படி தேசவம் போர்டு தலைவர் ஜெயக்குமார் குறைகளை களைந்து, உணவுகளில் இருந்து, கூட்ட நெரிசல் வரை நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனைத்தையும் ஆராய்ந்து சரிசெய்து வருகிறார்.
18 படிகளில் ஏற, 10 மணி நேரம்
இந்த நிலையில், நேற்று காலை பம்பையில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் மலை ஏற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பம்பை மணல் பரப்பில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு படிப்படியாக மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
க்யூ காம்ப்ளக்ஸ் காத்திருக்கும் பக்தர்கள்
அதன் பின் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் வரும் வழியில் மீண்டும் சரங்குத்தியில், 'கியூ காம்ப்ளக்ஸ்' கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டு, பின் சன்னிதானத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகிறது. இதற்கிடையே, 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு 4,000 முதல் 4,200 பக்தர்கள் வரை ஏற்றப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருப்பினும், கூட்டம் அலை மோதுவதால், 18 படிகளில் ஏற, 10 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து விரைவில் சரிசெய்து பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய வழிவகுக்கும்படி பக்தர்கள் கேட்டுக்கொண்டனர்.