Sabarimala : ஐயப்பன் கோவிலில் புதிய மெனு : பாரம்பரிய சத்யா உணவு

சபரிமலை கோவிலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதாக, தெரிவித்த தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தற்போது புதிய கோவில் மெனு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சத்யா வகை உணவு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sabarimala Ayyappa Temple Board Announced Free Traditional Annadanam Of Sadhya Food Menu List 2025 on Banana Leaf in Kerala
Sabarimala Ayyappa Temple Board Announced Free Traditional Annadanam Of Sadhya Food Menu List 2025 on Banana Leaf in KeralaGoogle
1 min read

Sabarimala Traditional Annadanam Of Sadhya Food Menu List : ஆண்டுதோறும் சபரிமலைக்கு உலகளவில் பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருந்து, இருமுடி சுமந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்து திரும்புாவர். ு குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஆரம்பமாகி 48 நாட்கள் ஒரு மண்டலம், ஒரு மாதம், 15 நாட்கள் என அவரவர்களுக்கு ஏற்றார் போல் மாறும்.

சபரிமலை கூட்ட நெரிசல்

இந்நிலையில், இந்த ஆண்டும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் உச்சம் தொட்டுள்ளது, இதற்கு தேவசம் தரப்பில் முன் கூட்டியே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கேரள அரசு முறையாக கையாளவில்லை. இதனால், பக்தர்கள் சபரிமலை செல்லாமல் பாதியிலேயே தங்களது பயணத்தை முடித்து செல்கின்றனர் என்று பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேரள உயர்நீதி மன்றம் எச்சரிக்கை

இந்த சம்பவம் தொடர்ந்ததை அடுத்து, இதற்கு கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து, பக்தர்களை அங்காங்கே நிறுத்தி வைக்காமல், முன்பதிவு சீட்டில் இருந்து அனைத்திலும் கவனம் செலுத்தி பக்தர்களை சிரமத்திற்கு உள்ளாமக்காமல், உணவு தண்ணீர் உள்ளிடவற்றை முறையாக அவர்களுக்கு கிடைக்க செய்யுமாறு தீர்ப்பளித்தது.

ஜெயக்குமார் உரை

இந்நிலையில், புதிதாக தேவசம் போர்டு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், இந்த குழப்பங்களை சரிசெய்து, பக்தர்களுக்கு ஐயப்பன் அருள் கிடைக்க வழிவகை செய்யுமாறு ஒப்புதல் அளித்தார். அதன்படி, தற்போது சபரிமலை அன்னாதான மெனுவில் மாற்றத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோவில் மெனுவில் மாற்றம்

பக்தர்களுக்கு புலாவ் மற்றும் சாம்பார் சாதம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனிமேல் இவற்றுக்குப் பதிலாக கேரளாவின் பாரம்பரிய சத்யா விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இனிப்பு, பாயசம் மற்றும் அப்பளத்துடன் இந்த உணவு வழங்கப்படும்.

பக்தர்கள் மூலம் அன்னதான செலவு

பக்தர்கள் அளிக்கும் நன்கொடையிலிருந்தே அன்னதானத்துக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கேரளாவின் கலாசார அடையாளமாக சத்யா விருந்தைப் பொறுத்தவரை வாழை இலையில் பலவிதமான உணவுகள் பரிமாறப்படும்.

இந்த அறிவி்பால் பக்தர்களுக்கு இனி புதிய மெனுவாக பாரம்பரிய சத்யா உணவுகள் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in