2026 ராம நவமியின் சிறப்பு : ராமரின் நெற்றியில் சூரிய திலகம், அயோத்தியில் நிகழவிருக்கும் அற்புதம்!

Sri Rama Navami 2026 Date and Time in Tamil : ராம நவமி அன்று பகல் 12:00 மணிக்கு சூரியக் கதிர்கள் மூன்று மாடிகளைக் கடந்து வந்து, கருவறையில் உள்ள பால ராமரின் நெற்றியில் 4 நிமிடங்கள் ஒளிரும்.
The Significance of 2026 Rama Navami: The Miracle Set to Unfold in Ayodhya! Sri Rama Navami 2026 Date and Time in Tamil
The Significance of 2026 Rama Navami: The Miracle Set to Unfold in Ayodhya! Sri Rama Navami 2026 Date and Time in Tamilsource : google
1 min read

The Significance of 2026 Rama Navami: The Miracle Set to Unfold in Ayodhya!

ராம நவமி 2026 :

Sri Rama Navami 2026 Date and Time in Tamil : தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் என்பதற்குச் சான்றாக விளங்கும் ராமபிரானின் அவதார தினம் 2026-ல் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

இந்த ஆண்டின் உச்சக்கட்ட நிகழ்வாக, அயோத்தி ராம ஜென்மபூமி கோவிலில் சூரிய திலகம் அமையவுள்ளது.

2026 ஸ்ரீராம நவமி: தேதி மற்றும் நேரக் குறிப்பு

2026 அம் ஆண்டிற்கான ராம நவமி திதி மார்ச் 26 காலை 11:48 மணிக்குத் தொடங்கி, மார்ச் 27 காலை 10:06 மணிக்கு முடிகிறது.

நண்பகல் ராம ஜென்ம நேரத்தின் அடிப்படையில் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களுமே பல இடங்களில் வழிபாடுகள் நடைபெறும். எனினும் மார்ச் 26 தான் ராம நவமியாக கொண்டாடப்பட உள்ளது.

பூஜை செய்ய உகந்த நேரம்

அன்றைய தினம் பூஜை செய்ய உகந்த நேரம்: நண்பகல் 11:13 முதல் 01:41 வரை.

மிக முக்கிய தருணம்: ஸ்ரீராமர் அவதரித்த நேரமாக கருதப்படும் நண்பகல் 12:27

அயோத்தியில் நிகழவிருக்கும் அற்புதம்

சூரிய வம்சத்தில் பிறந்த ராமச்சந்திர மூர்த்திக்கு, சூரிய பகவானே நேரில் வந்து திலகமிடுவது போன்ற இந்த நிகழ்வு, ஐஐடி விஞ்ஞானிகளின் நுட்பமான கண்ணாடி கருவி மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

ஆன்மிகமும் விஞ்ஞானமும்

சரியாக நண்பகல் 12:00 மணிக்கு சூரியக் கதிர்கள் மூன்று மாடிகளைக் கடந்து வந்து, கருவறையில் உள்ள பால ராமரின் நெற்றியில் 4 நிமிடங்கள் ஒளிரும்.

இந்த அற்புதக் காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி சரயு நதி தீப ஆரத்தி

ராம நவமி அன்று மாலை, சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான மகா ஆரத்தி நடைபெறும்.

ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு நதி முழுவதும் ஒளியால் அலங்கரிக்கப்படும். இது காசி கங்கை ஆரத்திக்கு இணையாகப் புகழ்பெற்ற ஒரு நிகழ்வாகும்.

ராம நவமி 2026 - கிரக நிலைகள்

ஜோதிட ரீதியாக, 2026 ராம நவமி அன்று கிரகங்கள் மிகவும் சாதகமான நிலையில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் தொடங்கும் புதிய முயற்சிகள், வீடுகள் கட்டுதல் அல்லது ஆன்மீகப் பயிற்சிகள் சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்:

நேரலை

தூர்தர்ஷன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அயோத்தி பூஜைகள் உலகம் முழுவதும் நேரலை செய்யப்பட உள்ளது.

கூட்ட நெரிசல் மேலாண்மை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் கூட்டத்தைக் கண்காணிக்கவும், பக்தர்களுக்குத் தடையற்ற தரிசனம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in