அரோகரா கோஷத்துடன் முடிவடைந்த சூரசம்ஹாரம்- முழு விவரம் இதோ!

திருச்செந்தூரில் பக்தர்கள் புடைசூழ்ந்து அரோகரா கோஷத்துடன், சூரசம்ஹார நிகழ்ச்சி சூரபத்மனுடன் வதம் செய்யப்பட்டு முடிவடைந்தது.
Soorasamharam ended with a health slogan - here are the full details!
Soorasamharam ended with a health slogan - here are the full details!image courtesy- google
2 min read

தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா

Soorasamharam ended with a health slogan - here are the full details! முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, உள்ளிட்டவகைளுடன் மண்டபத்தில் தீபாராதணையுடன் நடைபெற்றது.

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான இன்று மாலையில் கடற்கரையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் ஆகியவைகள் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.

அரங்கேறிய சூரசம்ஹார நிகழ்ச்சி

சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தரகள் திரண்டு புனித தீர்த்தங்களில் நீராடி, அங்க பிரதட்சணம் செய்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, விநாயகர் போன்ற வேடங்கள் அணிந்து சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக முருகப்பெருமான் கீர்தனைகளுடன் வழிபாடு செய்தனர். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராத னைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாரா தனை நடைபெற்று 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார். பின்னர், அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், யானை, சிங்க முகம் மற்றும் சூரபத்மனாக வந்த அசுரனை முருகன் வதம் செய்தார். பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அரங்கேறிய இந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பிறகு நாளை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

திருக்கல்யாணத்துடன் முடிவடையும் கந்த சஷ்டி விரதம்

பலநாடுகள் மற்றும் ஊர்களில் உள்ள பக்தர்கள் விடாப்பிடியாக முருகனை நினைத்து இந்த கந்த சஷ்டி விரதம் இருந்து, சூரசம்ஹார நிகழ்ச்சியை திருச்செந்தூரிலும், காணொளியாக தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களிலும் கண்டு களித்து ஆசி பெற்றனர். இதில் தொடர்ந்து ஒரு மண்டலம், 11 நாட்கள், 7 நாட்கள் என மற்றும் சூரசம்ஹார நாள் என விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை திருக்கல்யாண வைபவத்துடன் தங்களது விரதங்களை முருகன் அருளோடு, ஆசி பெற்று நிறைவு செய்ய உள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து முருகனின் துதியை பாடி அலைகடலென திருச்செந்தூரில் திரண்டுள்ள மக்கள், நாளை திருக்கல்யாணத்தையும் கண்டு களித்து வீடு திரும்பஉள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in