வைகுண்ட ஏகாதசி 2025 : பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை!

Tirupati Vaikunta Ekadasi 2025 Darshan Ticket : திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்​துக்கு டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
TTD Announced Entry to Tirupati Temple for Vaikunta Ekadasi 2025 Darshan will be permitted only with Ticket
TTD Announced Entry to Tirupati Temple for Vaikunta Ekadasi 2025 Darshan will be permitted only with TicketGoogle
1 min read

திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Tirupati Vaikunta Ekadasi 2025 Darshan Ticket : வை​குண்ட ஏகாதசியை முன்​னிட்​டு, திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்​துக்கு இம்​மாதம் 30, 31 மற்​றும் ஜன. 1-ம் தேதி​களில் தரிசன டிக்​கெட்​டு​கள் இருக்​கும் பக்​தர்​களுக்கு மட்​டுமே சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்​கப்​படும் என தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் தெரி​வித்​தார்.

தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்கள் சந்திப்பு

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அனில்குமார் சிங்கால் வரும் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி​யும், மறு​நாள் 31-ம் தேதி துவாதசி​யும், ஜன.1-ம் தேதி ஆங்​கில புத்​தாண்​டும் பிறக்க உள் ளது. வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு கடந்த மாதமே ஆன்லைன் மூலம் குலுக்​கல் முறை​யில் ரூ.300 சிறப்பு தரிசனடிக்​கெட்​டு​களும், அறக்​கட்​டளைக்​கான டிக்கெட்​டு​களும் வழங்​கப்​பட்டு விட்​டன.

திருப்பதியில் குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள்

இந்த 3 நாட்​களில் விஐபி பிரேக் தரிசனம், மாற்று திற​னாளி பக்​தர்​களுக்​கான தரிசனம், முதி​யோ​ருக்​கான தரிசனம் உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்​யப்​பட்டு விட்​டன.

கடந்த கால அனுபவங்​களை நினை​வில் கொண்​டு, வைகுண்ட ஏகாதசிக்கு வரும் பக்​தர் களுக்கு திருப்​ப​தி​யில் டிக்​கெட்​டு​களை வழங்​கி​னால், தள்​ளு​முள்ளு ஏற்​பட்டு விபரீதங்​கள் நடக்​க​வும் வாய்ப்​பு​கள் உள்​ள​தால் இம் முறை ஆன்​லைனில் குலுக்​கல் முறை​யில் டிக்​கெட்​டு​கள் வழங்​கப்​பட்டுவிட்​டன.

27 மாநிலத்தில் இருந்து முன்பதிவு

சாமானிய பக்​தர்​களுக்கு முன்​னுரிமை வழங்​கும் வித​மாக மேற்​கண்ட 10 நாட்​களில் 182 மணிநேரத்​தில் 164 மணி நேரம் சாமானிய பக்​தர்​களுக்​காக ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இ-டிப் மூலம் முன்​ப​திவு செய்த பக்​தர்​கள் அதில்குறிப்​பிட்​டுள்ள நேரத்​தில் திரு​மலைக்கு வர வேண்​டும். 27 மாநிலங்​களில் இருந்து சொர்க்க வாசல் தரிசனத்துக்கு 23.64 லட்​சம் பக்​தர்​கள் இது​வரை முன்​ப​திவு செய்​தனர். 1.89 லட்​சம் சாமானிய பக்​தர்​கள் குலுக்​கல் முறை​யில் ப​திவு செய்​தனர்.

ஜனவரி 2 முதல் தர்ம தரிசனம்

ஆதலால், எவ்​வித தரிசன முன்​ப​திவு டிக்​கெட்​டு​கள் இல்​லாத பக்​தர்​கள் வரும் டிச. 30, 31, ஜன. 1-ம் தேதி திரு​மலைக்கு வரும் நோக்​கத்தை தவிர்ப்பதே எவ்வித சிக்கல்களும் நேராமல் இருக்கும்.

ஜன.2 முதல் 8-ம் தேதி வரை எவ்​வித தரிசன டிக்​கெட்டு​கள் இல்​லா​விடினும் தர்ம தரிசனம் வாயி​லாகச் சென்று சுவாமியை சொர்க்க வாசலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துவிடலாம்.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி, ஆங்​கில புத்​தாண்டுக்கு தரிசன டிக்​கெட்​டு​கள் இல்​லாத பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து ஏமாற வேண்​டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் மிகவும் உர்ஜிதமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in