ஏழுமலையான் கோவிலில் தரிசனம்
Vaikunda Ekadashi 2025 Tirupati Sorgavasal Darshan : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொற்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர மாநில சபாநாயகர் அய்யனபாத்ரூடு , துணை சபாநாயகர் ரகுராமகிருஷ்ண ராஜு, நிதி அமைச்சர் பையாவுலு கேசவ், வேளாண்மை துறை அமைச்சர் அச்சன்நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடிகை ஸ்ரீலிலா உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தி கோஷத்துடன் தரிசித்த பக்தர்கள்
அதனை தொடர்ந்து ஆன்லைனில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் முன்கூட்டியே வரிசைகளில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி
காலை 9 மணிக்கு தங்க ரதத்தில் மலையப்ப சாமி பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் அருள் பாலித்தனர்.
3000 திவ்ய பிரபந்தம் பாராயணம்
இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அதியாயன உற்சவத்தில் இராபத்து உற்சவம் நடைபெற உள்ள நிலையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்பு வரும் 11 நாட்கள் 12 ஆழ்வார்கள் எழுதிய நான்காயிரம் திவ்ய பிரபந்தத்தில் இருந்து 3000 திவ்ய பிரபந்தம் பாசுரங்கள் பகல் பத்து உற்சவமாக ரங்கநாதர் மண்டபத்தில் பாராயணம் செய்யப்பட்டது.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
இன்று இரவு முதல் 10 நாட்களுக்கு ராபத்து உற்சவம் தொடங்கப்பட உள்ளது என்றும் இதில் நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் ஒரு நாளைக்கு 100 பாசுரங்கள் என பாராயணம் செய்யப்பட உள்ளது.
இரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு சொற்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
வைகுண்ட துவாதசியையொட்டி நாளை காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
டோக்கன் இல்லாத பக்தர்களும் வழிபாடு
தொடர்ந்து ஜனவரி 8 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
2 ம் தேதி முதல் 8ம் தேதி வரை தரிசன டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு நேரடியாக இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மலர் அலங்காரத்தில் திருமலை கோவில்
வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில் மற்றும் நான்கு மாட வீதி முழுவதும் பல்வேறு மலர் மற்றும் மின் அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலுக்கு எதிரே மலர்கள், பழங்கள், மின் அலங்காரத்திற்கு மத்தில் வைகுண்டத்தில் ரங்கநாதர் லட்சுமியுடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட அரங்கத்தில் ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.