

திருவண்ணாமலை மகா தீபம்
Tiruvannamalai Karthigai Maha Deepam 2025 History in Tamil : ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே மிகப்பெரிய பாக்கியம். மகாதீப தரிசனத்தை நேரில் காண்போரின் 21 சந்ததிகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மகா தீபத்தை ஏற்றுவது என்பது எவ்வளவு பெரிய புண்ணியமாக இருக்கும்.
பருவத ராஜகுலத்தினர்
மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றும் திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றி வரும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர். அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.
புராணக் கதை
இந்த உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு கிடைத்தது எப்படி என்றால்,
முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர்.
அசுரர்கள் - பருவதராஜன்
சிவபெருமான், பருவதராஜனை அழைத்து, கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார்.
அசுரர்களை அழித்த பார்வதி
கடலுக்குள் விரைந்து சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்டார்.
மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீனமகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.
முனிவரின் சாபம்
தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவதராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார்.
ஜோதி ஏற்றும் உரிமை
கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும்.
ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா எனும் முழக்கத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார்.
அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.
தீபம் ஏற்றும் முறை
அதன்படி, தீபம் ஏற்றுவதற்காக தேர்வு செய்யப்படும் 5 பேர், ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருப்பார்கள். தீபம் ஏற்றும் அடியார்க்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணாமலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து, மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் வழங்குவார்கள்.
மண் சட்டியில் தீபச்சுடர்
மேளதாளம் முழங்க எங்களை மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்வார்கள். திருவண்ணாமலையே சிவ வடிவம் என்பதால், அதன் மீது கால் வைத்து ஏறுவதற்கு முன்பு பாவ பிராயச்சித்தம் என்ற வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
மகாதீப கொப்பரை
மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இடுவார்கள். அதன் மீது, கற்பூர கட்டிகளை குவித்து வைப்பார்கள்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிதருவார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே பருவத ராஜகுலத்தை சேர்ந்தவர்கள் அகண்ட தீபம்(tiruvannamalai karthigai deepam 2025 date and time) ஏற்றுவார்கள்.
மலை உச்சியில் மகா தீபம்
அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில் நாங்கள் மகா தீபத்தை ஏற்றுவார்கள் அப்போது அவர்களின் கண்களிலும் உணர்வுகளிலும் தீபம் மட்டுமே நிறைந்திருக்கும். 11 நாட்கள் மகா தீபம் பிரகாசிக்கும்.
===========