பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் : அறிவியல் பாடத்தில் 10,476 பேர் 100க்கு 100...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பெற்று அசத்தியுள்ளது
10th standard exam results released, Pudukkottai district tops with 97.57%,
10th standard exam results released, Pudukkottai district tops with 97.57%,google
1 min read

வெளியானது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருகும் நிலையில் ,மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரையில் புதுக்கோட்டை (97.57%), சிவகங்கை (97.54%), தஞ்சாவூர் (97.41%), திருச்சி (97.31%), கன்னியாகுமரி (97.30%) மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது

94.31 சதவீதம் பேர் தேர்ச்சி

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் ,மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மாணவிகளே அதிக அளவில் தேர்சி

வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளனர் .

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம், மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெற்றுள்ளவர்களாக தமிழ் - பாடத்தில் 98.43%, ஆங்கிலம் 99.44%, கணிதம் 97.36%, அறிவியல் 98%, சமூக அறிவியல் 97.93%.

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் - 34 , ஆங்கிலம் - 93, கணிதம் 3194, அறிவியல் - 10476, சமூக அறிவியல் - 3336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in