அரக்கோணம் வழித்தடத்தில் இன்று முதல் ஜூன் 7 வரை 5 புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அரக்கோணம் ரயில்வே பணிமனை பராமரிப்புப் பணி காரணமாக ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பகுதி நேரமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் உள்ளே.
5 Suburban Trains Cancelled on Arakkonam Route from Today until June 7; Southern Railway Announces!
5 Suburban Trains Cancelled on Arakkonam Route from Today until June 7; Southern Railway Announces!source:google
1 min read

5 Suburban Trains Cancelled on Arakkonam Route from Today until June 7; Southern Railway Announces!

தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று (ஜூன் 3) முதல் வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம்

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் அரக்கோணம் வரையிலான ரயில்வே பிரிவில் கடவுப்பாதையை அதாவது Level Crossing நவீனமயமாக்கும் பொறியியல் பணிகள் ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை நடைபெறவுள்ளன.

இதனால் குறிப்பிட்ட வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்களின் விபரம்

பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பின்வரும் EMU மற்றும் MEMU ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

அரக்கோணம் - திருத்தணி மார்க்கம்

அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4:00 மணி மற்றும் 5:00 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் EMU ரயில்களும், காலை 6:20 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுத் திருத்தணி செல்லும் MEMU ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருத்தணி - அரக்கோணம் மார்க்கம்

திருத்தணியில் இருந்து இரவு 9:15 மணி மற்றும் நள்ளிரவு 1:10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் வரும் இரு EMU ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும் ரயில்கள் (பகுதி நேர ரத்து)

மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து மேற்குறிப்பிட்ட தேதிகளில் புறப்படும் சில ரயில்கள் அரக்கோணம் வரை செல்லாமல், திருவாலங்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முழுமையான விபரம் பின்வருமாறு

காலை 10:30 மணி, முற்பகல் 11:00 மணி, மாலை 5:15 மணி, மாலை 5:45 மணி, மாலை 6:05 மணி, மாலை 6:15 மணி, மாலை 6:40 மணி, இரவு 7:45 மணி,

இரவு 8:20 மணி, இரவு 9:10 மணி மற்றும் இரவு 11:55 மணிக்கு மூர்மூர்கெட் வளாகத்திலிருந்து அரக்கோணம் நோக்கிப் புறப்படும் EMU மற்றும் MEMU ரயில்கள் அனைத்தும் திருவாலங்காடு நிலையத்துடன் தங்களின் சேவையை நிறுத்திக்கொள்ளும்.

பயணிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டுகோள்

எனவே, இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை இதற்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in