
Best Music Director GV Prakash Kumar : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பதிவில், 71வது தேசிய திரைப்பட விருதுகளில் 'வாத்தி'(Vaathi Movie) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியும் நன்றியும் அடைகிறேன்.
71வது தேசிய திரைப்பட விருது 2025:
மதிப்பிற்குரிய நடுவர் குழு மற்றும் தேர்வு குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த அழகான பயணத்தின் ஒரு அங்கமாக இருந்த 'வாத்தி' படத்தின் முழு குழுவிற்கும் நன்றி.
இந்த படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்த எனது சகோதரர் தனுஷுக்கு சிறப்பு நன்றி. 'பொல்லாதவன்' முதல் 'அசுரன்', 'வாத்தி', 'இட்லி கடை' வரை எங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பு, இருவருக்கும் ஒரு படைப்பு ரீதியான நிறைவையும், வெகுமதியையும் அளித்துள்ளது.
எனது இயக்குநர் வெங்கி அட்லுரிக்கு மிகப் பெரிய நன்றி. இந்த படத்திற்கு எனது சிறந்த பங்களிப்பை அளிக்க என்னை ஊக்குவித்து, எனது இசையின் மீது நம்பிக்கை வைத்தார். 'வாத்தி' முதல் 'லக்கி பாஸ்கர்' வரை, மற்றும் எங்களது அடுத்த திட்டத்திலும், என் மீது வைத்த தொடர்ச்சியான நம்பிக்கைக்கும், வெற்றி பெற்ற தருணங்களை எங்களது பயணத்தில் கொண்டு வந்ததற்கும் நன்றி.
மேலும் படிக்க : திரைப்பட விருது:சிறந்த நடிகர் ஷாருக், துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் திரிவிக்ரம், என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி. எனது குடும்பம், எனது அற்புதமான இசைக் கலைஞர்கள் குழு, பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எனது நண்பர்கள் மற்றும் என்னை ஆதரித்து, என் மீது நம்பிக்கை வைத்த எனது அனைத்து ரசிகர்களுக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். பிரபஞ்சத்திற்கு நன்றி. இவ்வாறு ஜி. வி. பிரகாஷ் குமார்(GV Prakash Kumar) குறிப்பிட்டுள்ளார்.