முதல் நீர்வழி பாலம் இடிக்கப்படும் நிலை: பாதுகாக்கப்படுமா?

தமிழகத்தின் முதல் தொட்டிப்பாலமான காலிங்கராயன் பாலத்தை கசிவுநீர் என்ற பெயரில் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Action is being taken to demolish the Kalingarayan Bridge
Action is being taken to demolish the Kalingarayan Bridgegoogle
1 min read

உலக பாரம்பரிய அந்தஸ்து

சுமார் 750 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுவதும் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையம் (ICID) உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கிய சிறப்புக்குரியது இந்த பாலம்

750 ஆண்டுகள் பழமை

நதிகள் இணைப்பின் முன்னோடி என கூறப்படும் காலிங்கராயன் மன்னர் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பே காவிரி - நொய்யல் ஆற்றை காலிங்கராயன் வாய்க்கால் வெட்டி அதன் மூலம் இணைத்திருந்தார் என்பது நும் சிறப்புக்குரிய ஒன்றாகும் .

கோண வாய்க்கால் என்று மக்களால் அழைக்கப்படுகிறது

பவானி ஆற்றின் குறுக்கே கி.பி 1282ம் ஆண்டு பவானி அருகேயுள்ள காலிங்கராயன்பாளையத்தில் வாய்க்கால் வெட்டி சுமார் 56 மைல் தூரம் அதாவது 92 கி.மீ தூரம் கொண்டு சென்று ஆவுடையார்பாறை எனுமிடத்தில் நொய்யல் ஆற்றுடன் பவானி ஆற்றை இணைத்தனர்.

15,000 ஏக்கர் பாசன வசதி

நெளிந்து நெளிந்து பாம்புபோல் செல்வதால் இது "கோண வாய்க்கால்’’ என்று ஈரோடு மக்க்ளால் அழைக்கபடுகிறது . இதன் மூலம் 15673 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் இடது கரையில் மட்டுமே பாசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்க்கால் பாசனத்தின் சிறப்பு

வாய்க்காலை வெட்டும் போதே 14 மைல் தூரத்தில் கழிவுநீர் வாய்க்காலில் கலக்காத வகையில் ஓடையின் குறுக்கே 14 துவாரங்களுடன் கூடிய 41 மீட்டர் நீளமுள்ள பாலாத்தை அமைத்தது காலிங்கராயனின் சிறப்பை காட்டுகிறது.

தமிழ்நாட்டின் முதல் நீர்வழிப் பாலம்

மிழ்நாட்டின் முதல் நீர்வழிப் பாலம் (Aqueduct) என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது .இதன் பழமையைப் போற்றி 2021-ல் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையம் (ICID) இதற்கு உலக பாரம்பரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

பாலாத்தை இடிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

சிறப்பு பெற்ற இந்த தொட்டிபாலத்தை கசிவு நீர் வெளியேறுவதாக கூறி அதனை முழுவதும் இடித்து அகற்றுவதோடு புதிய பாலம் கட்ட அரசாணை வெளியிட்டு 83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலத்தை இடிக்க கூடாது என பொதுமக்களை மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர் .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in