

Actor cum Politician Vijay Movie Songs Ban in School Annual Functions : பள்ளி ஆண்டு விழாக்களில் நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய்யின் பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுவிழாக்களில் சினிமா பாடல்
தமிழகம மட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழாவின் போது சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வழக்கம்.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அப்படி இருக்கையில் இனிவரும் நாட்களில் தமிழகத்தில் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய்யின் பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடக் கூடாது என்றும் அதை தவிர்த்துவிடுமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கவனம் பெறும் சினிமா பாடல்கள்
பள்ளி ஆண்டுவிழா என்றாலே சினிமா பாடல் தான். அதிலும் விஜய் பாடல் என்றால் மாணவர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம். ஆனால் தற்போதைய இந்த அறிவுறுத்தலால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
எதற்காக விஜய் பாடலுக்கு தடை?
மேலும், எதற்காக விஜய் பாடல்களுக்கு மட்டும் இந்த தடை என்ற கேள்வியையும் முன்வைத்து வருகின்றனர்.
விஜய்க்கு தொடர் பிரச்சனை
நடிகர் விஜய் நடிக்கும் போது இவ்விதமான பிரச்சனைகளை சந்திக்கவில்லை. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து தொடர் பிரச்சனை, சிக்கல், குற்றச்சாட்டு தான்.
தவெக விசில் சின்னம் தடை
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டவுடன் , சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு யாரும் விசில் கொண்டுவரக் கூடாது என்ற அறிவிப்பு வெளியானது.
தூய்மை பணியாளர்களுக்கு விசில் பயன்படுத்த தடை
அதேபோல் மாநகர தூய்மைப் பணியாளர்களும் விசில் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் இனி விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
நெட்டிசன்கள் கேள்வி
இதைத்தொடர்ந்து இப்போது பள்ளி ஆண்டு விழாவில் விஜய்யின் பாடல்களை பயன்படுத்தக் கூடாதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விஜய்
ஆனால், சட்டமன்ற தேர்தலை விஜய் முதன்முதலாக எதிர்கொள்ளவிருக்கிறார். அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு
அதே நேரத்தில் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஆண்டுவிழாவும் நடைபெறும்.
சில பள்ளிகளில் ஆண்டுவிழா நிறைவு பெற்றுள்ளது. இதில் ஒருசில மாணவர்கள் விஜயின் கட்சிக் கொடியையும், சின்னத்தையும் காட்சிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அரசியல் சாயம் பூசப்படும் அபாயம்
ஏற்கெனவே இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என எல்லா இடங்களிலும் கட்சிக் கொடி, சின்னம் காட்டப்படுகிறது. இதேபோல் பள்ளிகளிலும் நடந்தால் மாணவர்களின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களுக்கும் அரசியல் சாயம் பூசப்படும் அபாயம் உள்ளது.
இதன்மூலம் பள்ளி வளாகங்களில், மாணவர்களிடையே அரசியல் சாயம் படிவதை தடுக்கும் விதமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.
====