
Actor Power Star Srinivasan Arrest in Chennai : கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனவாசன். இவர் மீது பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பல்வேறு புகார்கள் உள்ளன. இந்தநிலையில் தொழிலதிபர் ஒருவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.1,000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்தார். இதையறிந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்(Srinivasan), தான் கடன் வாங்கித் தருவதாக அந்த தொழிலதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.
இதற்கான கமிஷன் தொகையாக ரூ.10 கோடியை முதலில் தரும்படி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும், அந்த தொழிலதிபர் சீனிவாசனுக்கு முதல் கட்டமாக ரூ.5 கோடியை மட்டும் வழங்கியதாக கூறப்படுகிறது.பணத்தைப் பெற்றுக் கொண்ட சீனிவாசன்(Power Star Srinivasan), உறுதி அளித்தபடி கடனை பெற்றுக் கொடுக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.
சந்தேகம் அடைந்த தொழிலதிபர், கமிஷனாக பெற்ற தொகையை திரும்ப கேட்கவே, சீனிவாசன் பணத்தை கொடுக்கவில்லை. இதனையடுத்து தொழிலதிபர் இந்த பண மோசடி தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் சீனிவாசன் மீது புகார் செய்தார். சீனிவாசன் மீது வழக்குப் பதிவு(Power Star Srinivasan Case) செய்து காவல்துறையினர், அவரை 2013-ம் ஆண்டு கைது செய்தனர்.
அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன், 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இந்தநிலையில் சென்னை வந்த டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், அண்ணாநகர் வீட்டில் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது(Power Star Srinivasan Arrest) செய்தனர். பின்னர், அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட சீனிவாசன் மீது மோசடி வழக்குகள் பல உள்ளன.