போதைப்பொருள் விவகாரம் : நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்  விவகாரம்  : நடிகர் ஸ்ரீகாந்த் கைது
https://x.com/hashtag/ActorSrikanth
1 min read

தமிழ் திரையுலகில் ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், நண்பன் போன்ற திரைப்படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

இவரிடம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணை நடைபெற்று பின்னர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்துவரும் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கண்காணிப்பின் போது ஏற்கனவே மேற்கு ஆப்பிரிக்கா நாட்டின் கானாவைச் சேர்ந்த ஜான் மற்றும் சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் ஆயிரம் விளக்கு பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 11 கிராம் போதைப்பொருளான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத்திற்கு ,பிரதீப் போதைப் பொருளை விற்றது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போதை விற்பனை செய்த ஆசாமிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடமிருந்து, நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளாரா? என்பதை உறுதி செய்வதற்காக அவரின் இரத்த மாதிரியை பரிசோதனை மேற்கொள்ள நடிகர் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in