"அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா"? : வதந்திகளுக்கு நற்பணி மன்றம் முற்றுப்புள்ளி!

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதாகப் பரவிய வதந்திகளுக்கு, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 Actor Suriya Political Entry Rumors Fan Club Official Clarification
Actor Suriya Political Entry Rumors Fan Club Official Clarificationgoogle
2 min read

Actor Suriya Political Entry Rumors Fan Club Official Clarification

தமிழக அரசியலில் அண்மையில் பெரும் திருப்பமாக, நடிகரும், தவெக தலைவருமான விஜய் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று முதல்வர் அரியணையைப் பிடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார்.

அரசியலை நோக்கி சினிமா பிரபலங்கள்?

முதல்வர் விஜயைத் தொடர்ந்து , திரையுலகைச் சேர்ந்த அடுத்தடுத்த பிரபலங்கள் அரசியலுக்கு வருவார்களா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

கல்வி சேவையில் சூர்யா

அந்த வகையில், ’அகரம் ஃபவுண்டேஷன்’ கல்வி சேவையில் சிறந்து விளங்கும் முன்னணி நடிகர் சூர்யாவும் விரைவில் அரசியலுக்கு வரக்கூடும் என இணையத்தில் ஒரு புதிய விவாதம் கிளம்பியது.

இதற்கு முக்கிய காரணம், சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் பேசிய பேச்சாகும்.

சர்ச்சையை ஏற்படுத்திய ரசிகர் மன்றக் கூட்டம்

கடந்த 28.06.2026 அன்று சென்னையில் சூர்யா நற்பணி இயக்கத்தின் முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட வீரமணி என்பவர், "காலம், கடவுள் எல்லாம் முடிவு செய்துவிட்டது.

சூர்யா அண்ணன் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது" என்று பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, சூர்யா அரசியலுக்கு வருவதற்கான சிக்னலோ என்ற ரீதியில் செய்திகள் பரவின.

அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் மறுப்பு

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

கூட்டத்தில் பேசிய வீரமணி என்பவர், "இது என்னுடைய தனிப்பட்ட கருத்து" என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது நற்பணி மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம்.

3 ஆண்டுகளாக நிர்வாகப் பொறுப்பில் இல்லை

கடந்த மூன்று ஆண்டுகளாக வீரமணி என்பவர் மன்றத்தின் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை என்பதையும் நற்பணி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் தற்போதும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கான சமூக சேவைகளைத் தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்து வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நற்பணி மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் அனைத்தும் இனி செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே முறையாக வெளியிடப்படும். எனவே, அந்த அறிவிப்புகளை மட்டுமே அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்விப் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் சூர்யா, தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் என்பது இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in