திமுகவின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்- எடப்பாடி!

Edappadi Palanisamy Slams DMK Government : காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ADMK Chief Edappadi Palanisamy Slams DMK Government Kaveri Water Dispute Issue
ADMK Chief Edappadi Palanisamy Slams DMK Government Kaveri Water Dispute IssueGoogle
1 min read

எடப்பாடி பழனிசாமி பேச்சு

Edappadi Palanisamy Slams DMK Government : சேலம், பச்சைத்துண்டு போட்டு துரோகம் செய்தவர் என்ற முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்துள்ளார். நெல் கொள்முதலில் திமுக அரசின் மெத்தனத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவுதான் உண்மை நிலை. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை முன்கூட்டியே திட்டமிட்டு பயிர்களை அறுவடை செய்திருந்தால் மழையில் நெல் நனைத்திருக்காது. காவிரி படுகை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

விவசாயிகள் கண்ணீர் தெரியமால் முதல்வர் திரைப்படம் பார்க்க செல்கிறார்

மேலும், நாடாளுமன்றத்தில் 100க்கு 100 சதவீதம் வெற்றி என மார்தட்டக்கூடாது என்றும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு செய்ய வேண்டும். விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் திரைப்படம் பார்க்க செல்கிறார் முதல்-அமைச்சர். 4 ஆண்டுகளில் குறுவை சாகுபடி விவசாயிகளை பயிர் காப்பிட்டு திட்டத்தில் இடம்பெற செய்யவில்லை. வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என கூறட்டும்.

காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்

3 வேளாண் சட்டம் என்ன என்று முதலமைச்சருக்கு தெரியவில்லை. அவர் சொல்லட்டும் நான் பதில் கூறுகிறேன். கோரிக்கைகள் நீங்கள் கேட்டு வாங்க வேண்டும் அதனைகூட எதிர்க்கட்சிதான் செய்ய வேண்டி இருக்கிறது. காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி செய்கிறது

விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசாங்கம். நானும் ஒரு விவசாயிதான். சட்டமன்ற உறுப்பினரானது முதல் இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன்.

நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் ஆக உயர்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த காரணத்தை கூறவில்லை. எஸ்.ஐ.ஆரை எதிர்த்து இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி செய்கிறது. அது அவர்களுக்கு கை வைந்த கலை ஆகும். எஸ்.ஐ.ஆர். வரக்கூடாது என திமுக அரசு துடிக்கிறது. ஆளும் கட்சி அவர்கள் தான். என்ன பிரச்சினை இருக்கிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in