கரூர் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

EPS on Karur: எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தருமபுரி அருகே பரப்புரை மேற்கொண்ட அவர், கரூர் உயிரிழப்பிற்கு அரசு தான் காரணம் என விமர்சித்துள்ளார்.
ADMK Chief Edappadi Palanisamy About Karur Stampede Incident in Dharmapuri Election Campaign
ADMK Chief Edappadi Palanisamy About Karur Stampede Incident in Dharmapuri Election Campaign
2 min read

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி :

Edappadi Palanisamy About Karur Stampede Incident : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என கூறி​னார். மேலும் கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு அரசு போதிய பாது​காப்பு ஏற்​படுத்​தித் தராதது​தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்

அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது தமிழக அரசின் கடமை. முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் காவல் துறை உள்​ள​தால், கரூர் சம்​பவத்​துக்கு அவர்​தான் பொறுப்​பேற்க வேண்​டும். மக்​கள் கேள்வி​களுக்​கும் அவர்​தான் பதில் கூற வேண்​டும். தற்​போது ஒரு நபர் ஆணைய விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது.அவர்​களின் விசா​ரணை முடிவை பொறுத்​திருந்து பார்ப்​போம்.

ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு மற்றவர்கள் பேசக்கூடாது

ஒரு நபர் ஆணை​யம் அமைக்​கப்​பட்ட பிறகு ஐஏஎஸ் அதி​காரி​கள், காவல் துறை உயர் அதி​காரி​கள் ஆகியோர் இந்த விவ​காரம் தொடர்​பாக பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடந்த அதி​முக ஆட்​சி​யின்​போது திமுக-வுக்கு பல கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், தற்​போது திமுக அரசு எதிர்க்​கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்​கிறது என்று விமர்சித்தும் ஆட்​சி, அதி​காரம் இருக்​கிறது என்று ஆடி​னால் காணா​மல் போய்​விடு​வீர்​கள் என்று கூறினார்.

இடதுசாரிகள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர்

இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டோம் என கூறும் முதல்​வர் ஸ்டா​லின், கரூர் சம்​பவத்​தின் மூலம் தேசிய அளவில் தமிழகத்​துக்கு தலைகுனிவை ஏற்​படுத்தி விட்​டார் என்றும் விசிக, இடது​சாரி கட்​சிகள் மனசாட்​சியை இழந்து விட்​டனர் என்று பதிலளித்தார். திருச்​சி, விழுப்​புரத்​தில் அவர்​கள் மாநாடு நடத்த அனு​மதி கேட்ட இடத்​துக்கு திமுக அரசு அனு​மதி தரவில்லை என்று அப்​போது குற்​றம்​சாட்​டினர். ஆனால், தற்​போது கரூர் சம்​பவத்​தில் அரசுக்கு ஆதர​வாக நிற்​கின்​றனர் என்று கேள்வி எழுப்பினார்.

பல்லாயிரம் கோடி முறைகேடு

டாஸ்​மாக்​ என்றும் மதுபான முறை​கேடு மூலம் பல்​லா​யிரம் கோடி முறை​கேடு நடந்​துள்​ளது. மீண்​டும் அதி​முக அரசு அமைந்​தவுடன் இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​படும் என்று உறுதியளித்த அவர், அதே​போல, திமுக ஆட்​சி​யில் முடக்​கி​வைத்​துள்ள திட்​டங்​கள் அனைத்​தும் மீண்​டும் அமல்​படுத்​தப்​படும். அதற்​கு பொது​மக்​கள் அதி​முக-வை ஆதரிக்க வேண்​டும் என்று கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க : ’விஜய் மீது வழக்கு போட ஏன் அச்சம்?’: திமுக அரசுக்கு திருமா கேள்வி

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள்

முன்​ன​தாக, கூட்​டம் தொடங்​கும்​போது கரூர் சம்​பவத்​துக்கு 2 நிமிட மவுன அஞ்​சலி செலுத்​தப்​பட்​டதை அடுத்து கூட்​டத்​தில், முன்​னாள் அமைச்​சர்​கள் கே.பி.அன்​பழகன், முல்​லை​வேந்​தன் மற்​றும் அதி​முக நிர்​வாகி​கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்​து​ கொண்​டனர். இதில் எடப்பாடி பழனிசாமி கூறிய அனைத்து கருத்துகளுக்கும் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இவர் பேசிய அந்ந பரபரப்பு காணொளியை நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து டிரெண்ட் செய்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in