'ஸ்டிக்கர்' ஒட்டுகிறார் ஸ்டாலின் : செங்கோட்டையன் விமர்சனம்

ADMK Sengottaiyan on Ungaludan Stalin Scheme : உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதை விமர்சித்து செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார்.
ADMK Sengottaiyan Criticized Ungaludan Stalin Scheme
ADMK Sengottaiyan Criticized Ungaludan Stalin Scheme
1 min read

ADMK Sengottaiyan on Ungaludan Stalin Scheme : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பதிவில், 2013 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்டதுதான் மக்களைத் தேடி வருவாய்த்துறை அம்மா திட்டம் (AMMA - Assured Maximum Service to Marginal People in All_Villages) எனக் குறிப்பிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இத்திட்டத்தை மறைத்து ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுகிறார் எனவும் அப்பதிவில் செங்கோட்டையன்(Sengottaiyan) தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்(Ungaludan Stalin) பெரும்பொருட்செலவில் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டம் தான் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றோம் என்ற பெயரில் அவர்களிடம் செல்போன் எண்களைப் பெற்றுக்கொண்டு , அதனை திமுக ஐடி விங்க்கு அனுப்பி வைக்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : EPS: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் : எடப்பாடி 'பகீர்' குற்றச்சாட்டு

அதேபோன்று பாமக தலைவர் அன்புமணியும் இத்திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை என்று கூறியதுடன், ஊரை ஏமாற்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாறாக சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in