
Street Dog Sterilization in Chennai : தெரு நாய்களிடமும் ஊழல் செய்த திமுக என்ற தலைப்பில் அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்தது அம்பலம்.
அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய திமுகவின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்கள் வரை தொன்று தொட்டு தொடர்கிறது என்று பதிவிட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டை மறுத்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67,806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதில் ஜூன் 2025-ல் மட்டும் 139 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,11,371 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்காக 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 3 கோடியே 51 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கூட்டணி நிலைப்பாடு,’விஜய் மாறுவார்’ : ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை