தவெகவின் முதல் வேளாண் பட்ஜெட் 2026=27
தவெகவின் முதல் வேளாண் பட்ஜெட்டானது இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது ..நேற்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வேளாண் துறைக்கு பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது
நம்மாழ்வார்,அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள்
வேளாண் பட்ஜெட்டில் 5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருத்திற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்..
அஞ்சலை அம்மாள் விருது முதல் பரிசு ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் வழங்கபடவுள்ளது.
சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடியும் ,தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் 1 ஏக்கரில் சாகுபடியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உர பயன்பாட்டை ஊக்குவிக்க , ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை
வேளாண் பட்ஜெட்டில், உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கதொகை வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் வினோத் அவர்கள் தெரிவித்துள்ளனர் ,
20 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்யும் விசாயிகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், நச்சு மதிப்பீடு செய்யும் பரிசோதனைக்கு முழுமானியம் வழங்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரசாயன உரங்களை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்
மண்வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்4
ரூ.203 கோடியில் பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் அமைக்கப்படும். ர். சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==========================