தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெறுவதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பார்ப்பவரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய இன்று கன்னியகுமாரியில் பரப்புரையில் ஈடுபட்டார்
விஜய்யின் கன்னியாகுமாரி பரப்புரை
இன்று கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுப்பட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் “என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னியாகுமரி, காரைக்குடி மக்களுக்கு வணக்கம். அன்று காரைக்குடியில் என்னால் பேச முடியாமல் போனது. இப்போது தவெக ஆட்சியின் சில திட்டங்களை அறிவிக்கிறேன் என்று தனது உரையை தொடங்கினார் .
லஞ்சம் இல்லாமல் நலம் திட்டம்
தவெக அரசு அமைந்தால், நம் ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலத்திட்டம் போய் சேரும். அதற்காக ஆதார் அட்டை போல தமிழகத்தில் ஒரு அடையாள அட்டை உருவாக்கப்படும். ஏஐ தரவுடன், லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள் இந்த அட்டை மூலம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று பேசினார்
சேவை உறுதி திட்டம் அமலபடுத்தப்படும்,
, தவெக ஆட்சியில் தமிழ்நாடு சேவை உறுதி திட்டம் உருவாக்கப்படும். ஆப் மூலமாக ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை இடைத்தரகர் இல்லாமல், லஞ்சம் இல்லாமல் பெறலாம். பட்ஜெட்டை ஒரு ஆவணமாக மட்டும் நமக்குத் தெரியும். அந்த நிதி எங்கே செல்கிறது என நமக்கு தெரியாது. அது சிதம்பர ரகசியம் போல ஸ்டாலின் சார் ரகசியமாக உள்ளது.
அரசின் பங்காளராக மக்கள்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட், ஒதுக்கப்படும் நிதி எல்லாம் சிதம்பரம் ரகசியம்போல இருக்கிறது. அதை நாம் மாற்றுவோம். மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருப்பார்கள்.
அரசுக்கு மக்கள் யோசனை கூறலாம்
மாநிலத்தின் வளர்ச்சிக்காக யோசனைகளை மக்கள் கூறும் வகையில் இணையதளம் உருவாக்கப்படும். மக்கள் அரங்கம் திட்டத்தில் மக்கள் டிஜிட்டல் தளத்தில் மனுக்களை சட்டமன்றத்தில் சமர்பிக்க திட்டம். 5 லட்சம் மனுக்கள் சமர்பிக்கப்பட்டால் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்.
தமிழகத்தில் ஏஐ பல்கலைக்கழகம்
தமிழ்நாடு இந்தியாவின் ஏஐ டிஜிட்டல் தலைநகரமாக மாறும். தமிழ்நாட்டின் முதல் முதல் ஏஐ பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
பொறியியல் திறமையுடன் பொருளாதாரம் தனதாக்கப்படும். சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும்.
மீனவர்களுக்காக விஜயின் அறிவிப்புகள்
* மீனவர் பாதுகாப்பு உரிமைத்தொகை ரூ.20,000 உயர்த்தப்படும்
* ’படகு பாதுகாப்பு நிதி’ - உரிமையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்
* மாதாந்திர டீசல் மானியம் 1,800 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும். லிட்டருக்கு ரூ.15 மானிய.ம்
* ’கடல்தாய் வீட்டு வசதி திட்டம்’ - குடிசைகள் அகற்றி, புதிய வீடுகள் கட்டித் தரப்படும்