எல்லா துறையிலும் ALL FAIL: ”Dmk Report Card”ஐ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
Tamil Nadu BJP state president Nainar Nagendran has said that crimes against women have increased under the DMK regime.
Tamil Nadu BJP state president Nainar Nagendran has said that crimes against women have increased under the DMK regime.source:Nainar Nagenthran,x.com
2 min read

Nainar Nagendran about dmk government:

சட்டசபையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

சட்டசபையில் பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 59.70 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூரியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

இதுதொடர்பாக அவர் மேலும் பேசும்போது, கடந்த ஆட்சியுடன் திமுக ஆட்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்து, பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

குழந்தைகளுக்கெதிரான போக்சோ குற்றங்கள் உயர்வு

பெண்களைப் போலவே, குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 125.5 சதவீதமாக அதிகரித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த நிலையில், இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் என சட்டசபையில் சொல்வது வெட்கமாக இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் போலி முகத்திரை கிழித்தெறியப்படும்

தமிழக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையில்லாமல் , எப்போதும் திசை திருப்புவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திமுகவின் போலி முகத்திரை, வரும் தேர்தலில் கிழித்தெறியப்படும் என்றும் பேசியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில்

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இடைக்கால பட்ஜெட்டில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை . திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இல்லை.

ஆட்சிக்கு மீண்டும் வர மாட்டார்கள்

இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியை அவர்கள் விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

துணை முதலமைச்சரை முதல்வராக்க...

துணை முதலமைச்சரை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்றும் கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் தனது சமூக வலை தளப் பக்கத்தில் 15 நிமிட காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

திமுகவின் 'Report Card'

அந்த காணொளியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்த 'Report Card' இதோ.

எல்லா துறையிலும் ALL FAIL

விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளதை அரசுப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த #ALLFAIL அரசாங்கத்தின் உண்மை நிலையை இக்காணொளி வாயிலாக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்பெருமை பேசும் முதல்வர்

நான் டெல்டாக்காரன், விவசாயிகளின் நண்பன் என தற்பெருமை பேசும் முதல்வர் விவசாயத்துறையில் 57 வாக்குறுதிகளை கொடுத்து அதில் 14 -ஐ மட்டும் தான் நிறைவேற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் தோல்வி நிலை

இதேபோல நிர்வாகத்திறன், மகளிர் நலன், மீனவர் நலன், உள்கட்டமைப்பு,சுகாதாரம் என 10 துறைகளில் திமுக நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகளும், கொடுத்த வாக்குறுதிகள் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனடிபடையில் திமுகவிலை தோல்வி நிலை என தரவுகளையும் அந்த காணொலியில் விளக்கியுள்ளார்.

கடைசியாக 505 வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு அதில் பாதியைக் கூட நிறைவேற்றாமல் திராவிட மாடல் என்று இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in