Actor Suriya : 2026 தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிடுகிறாரா ?

Actor Suriya in TN Assembly Election 2026 : 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிடுகிறார் என்று பரவும் செய்திக்கு அவருடைய நற்பணி இயக்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
All India Surya Fans Club Statement Released on Actor Suriya Contest in TN Assembly Elections 2026
All India Surya Fans Club Statement Released on Actor Suriya Contest in TN Assembly Elections 2026
1 min read

Actor Suriya in TN Assembly Election 2026 : நடிகர் சூர்யா திமுகவில் இணைய உள்ளதாகவும், கோவையில் போட்டியிட உள்ளதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தநிலையில்அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை(All India Surya Fans Club Twitter) வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கaம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா(Actor Suriya) களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு(Agaram Foundation) தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே சூர்யாவின் கவனம் இருக்கும். எங்கள் சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சூர்யா பற்றிய அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in