பெண்களுக்கான பிரத்யேகமான பிங்க் பார்க்
சென்னையில் பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில், பெண்களுக்கான பிரத்யேகமான பிங்க் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது , இது பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான ஒரு புதிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது
18,000 சதுர அடி பரப்பில் உருவாகி வரும்
சென்னையின் முதல் பெண்களுக்கான பிரத்யேகப் 'பிங்க் பார்க்' (Pink Park) தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் மண்டலம், 23வது வார்டுக்கு உட்பட்ட நடேசன் நகர் 2வது தெருவில் ரூ.1.25 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 18,000 சதுர அடி நிலப்பரப்பில் உருவாகும் இந்தப் பூங்காவில் பெண்களுக்கென பிரத்தியேக உடற்பயிற்சிக் கூடம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கருவிகளும் இந்த பிங்க் பார்க்கில் அமைக்கப்பட்டு வருகிறது
பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான முன்னெடுப்பு
இவ்வாறான பூங்காக்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் ஒரு சிறந்த முன்னெடுப்பாக இந்த பெண்களுக்கான் பிங்க் பார்க் பார்க்கப்படுகிறது
அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களின்றி நடமாடலாம்
குறிப்பாக பெண்கள் எந்தவித பயமும் இன்றி நடை பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும் உதவும் வகையில் இந்த பிங்க் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது
மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான வசதிகளும் இடம்பெற இருக்கிறது , இது பெண்களிடையெ அதிக வரவேற்ப்பையும் , இந்த திட்டம் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் வேண்டும் என்பதும் மக்களிடம் எதிர்ப்பார்பாக உள்ளது
========================