திமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் இல்லை : அன்புமணி!

Anbumani on DMK : திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில், இன்​று​வரை ஒரு மெகா​வாட் அளவுக்​குக்​கூட புதிய மின் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட​வில்​லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss Statement on DMK Government were Not Implemented New Electrical Projects in Tamil Nadu
Anbumani Ramadoss Statement on DMK Government were Not Implemented New Electrical Projects in Tamil NaduGoogle
1 min read

அன்புமணி ராமதாஸ் தொடர் அறிக்கைகள்

Anbumani Ramadoss Statement on DMK About New Electrical Projects : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , ஆளுங்கட்சியான திமுகவின் ஆட்சி குறித்து தொடர்ந்து, விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதில் குறிப்பாக எக்ஸ் வலைதளத்தில் தனது அறிக்கைகளையும் தொடர்ந்து பதிவிட்டு வரும் அவர், தனது கட்சி சார்ந்த பொதுக்கூட்டம் மற்றும் புதிய முடிவுகளையும் அதில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

மேலும், தனது கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சி நிச்சயாமாக வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்றும் கூறி வருகிறார்.

அன்புமணி ராமதாஸ் காட்டம்

பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் தமிழகத்​தில் 2024-25-ம் ஆண்​டில் வீடு​களுக்​கும், வணிக நிறு​வனங்​களுக்​கும் வழங்​கப்​பட்​டுள்ள மின்​சா​ரத்​தில் வெறும் 16 சதவீதம் மட்​டுமே மின்​சார வாரி​யத்​தால் சொந்​த​மாக உற்​பத்தி செய்​யப்​படு​கிறது.

80.66% மின்சாரம் கொள்முதல்

80.66 சதவீத மின்சாரம் வெளி​யாரிட​மிருந்து வாங்​கப்​படு​கிறது. திமுக ஆட்​சிக்கு வந்து 5 ஆண்​டு​கள் நிறைவடைய​வுள்ள நிலை​யில், இன்​று​வரை ஒரு மெகா​வாட் அளவுக்​குக்​கூட புதிய மின் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட​வில்​லை என்று தெரிவித்துள்ளனர்.

நஷ்டத்தில் மின்வாரியம்

ரூ.10,158 கோடி செல​வில் கட்​டமைக்​கப்​பட்ட 800 மெகா​வாட் திறன் கொண்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்​நிலை​யம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்டு 20 மாதங்​கள் ஆகும் நிலை​யில், இன்று வரை அதில் வணி​கரீ​தியி​லான மின்​னுற்​பத்தி தொடங்​கப்​பட​வில்​லை.

தமிழகத்​தில் மின்​கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டதன் மூலம் மின்​வாரி​யத்​துக்கு இது​வரை ரூ.1 லட்​சத்து 28,363 கோடி கூடு​தலாக வரு​மானம் கிடைத்​திருக்​கிறது.

ஆனால், மின்​வாரி​யம் இன்​னும் நஷ்டத்​தில் இயங்​கிக் கொண்​டிருப்​ப​தற்கு காரணம் மின்​சார கொள்​முதல் ஊழல்​கள்​தான். தனி​யாரிடம் மின்சாரம் வாங்கி பல்​லா​யிரம் கோடி ஊழல் செய்​வதற்​காகவே மின் திட்​டங்​களை செயல்​படுத்த திமுக ஆட்​சி​யாளர்​கள் மறுக்​கிறார்​கள். தேர்​தலில் அவர்​களுக்கு மக்​கள் பாடத்​தைப் புகட்​டு​வார்​கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in