

Anti-corruption units in all city and district police forces: The Tamil Nadu government's decisive action continues!
காவல் துறையின் தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால்
அனைத்து மாநகர காவல் ஆணையரகங்கள் மற்றும் மாவட்ட காவல் துறைகளிலும் ஊழல் ஒழிப்பி தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காவல்துறையினர் லஞ்சம் வாங்கினால் அதிரடி நடவடிக்கை
காவல் துறையினரே லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீதும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினர் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு ஒன்றை தொடங்க வேண்டும் என்று அண்மையில் காவல் துறையின் தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.
மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தனிப்பிரிவு
தமிழக காவல்துறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு இயங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இப்பிரிவின் முதன்மை நோக்கம்
காவல்துறை அதிகாரிகளின் ஊழல், முறைகேடு, குற்றச்சாட்டுகள், துஷ்பிரயோகம் முதலான ஒழுங்கீன நடவடிக்கைகளை கண்காணிப்பது மற்றும் அது தொடர்பான புகார்களை விசாரிப்பதே இப்பிரிவின் முதன்மை நோக்கமாகும்.
பொதுமக்களுக்கு பிரத்யேகமாக தொலைபேசி/ வாட்ஸ் அப் எண்கள்
இதுகுறித்து பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மாநகரங்களுக்கும் தனித்தனியாக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
எந்தவித அச்சுறுத்தலுக்கும் ஆளாக மாட்டார்கள்
அவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல், பழிவாங்கல் நடவடிக்கைகள் ஏதும் நடைபெறாது அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். எந்தவித அச்சுறுத்தலுக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் விசாரணை, தகுந்த நடவடிக்கை : டிஜிபி உறுதி
இப்பிரிவில் பெறப்படும் புகார்கள் உரிய நேரத்தில் காலம் தாழ்த்தாமல் விசாரனை செய்யபட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையின் தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி ஆணையகரம் மற்றும் மாவட்டம் வாரியான எண்கள்
தாம்பரம் ஆணையரகம் : 63745 14428
சென்னை ஆணையரகம் : 78717 23000
ஆவடி ஆணையரகம் : 98400 18110
காஞ்சிபுரம் மாவட்டம்: 99400 31700
செங்கல்பட்டு மாவட்டம்: 95007 79100
திருவள்ளூர் மாவட்டம் : 94981 81359
=====