சட்டமன்ற தேர்தல் 2026: பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு!

TVK Vijay Nomination Paper Accepted for Perambur, Trichy East Constituency : பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
The nomination paper of TVK leader Vijay for the Perambur constituency has been accepted.
The nomination paper of TVK leader Vijay for the Perambur constituency has been accepted.source : google
1 min read

The nomination paper of TVK leader Vijay for the Perambur constituency has been accepted.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜயின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாகும் தேர்தல் களம்

வரும் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,கடந்த 30 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, நேற்று வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து இன்று வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டு வருகிறது.

முதன்முறையாக களம் காணும் விஜய்

அதன்படி முதன்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

பெரம்பூரில் விஜயின் வேட்புமனு ஏற்பு

இந்நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன்

அதேபோல் சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும்தமிழிசை சௌந்தரராஜன்,

முதல்வர், துணை முதல்வர்,விஜய பிரபாகர்

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in