தமிழகத்தில் திருடப்பட்ட சாமி சிலைகள்: ஒப்படைக்க USA, AUSI ஒப்புதல்

Australia and US Approved Return of Five Statues stolen from Tamil Nadu : தமிழகத்திலிருந்து திருடப்பட்ட ஐந்து சிலைகளை திருப்பி ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளன.
Australia and the US have approved the return of the five statues stolen from Tamil Nadu
Australia and the US have approved the return of the five statues stolen from Tamil Nadusource:google
2 min read

தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகள்

Australia and US Approved Return of Five Statues stolen from Tamil Nadu : தமிழகத்திலிருந்து திருடப்பட்ட பழமை வாய்ந்த 5 சிலைகள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிலைகள்

இந்த ஐந்து சிலைகளையும் தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழக சிலை கடத்தல் பிரிவு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து திருடப்பட்ட ஐந்து சிலைகளையும் தமிகத்திற்கு அனுப்ப ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக சிலை கடத்தல் பிரிவு

கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள், கலைப்பொருட்கள் முதலானவற்றை திருடுதல், கடத்தல் பணிகளில் ஈடுபடுதலை தடுப்பது, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது போன்ற பணிகளில் ஈடுவதற்கான சிறப்புப் பிரிவு தான் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு.

சிலைகளை மீட்கும் பணி தீவிரம்

தொடர்ந்து தமிழக கோவில்களில் உள்ள பழமையான சிலைகள், தொல்லியல் இடங்களில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், அவற்றை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

’பிளாக் செயின்’ தொழில்நுட்பம்

சிலை திருட்டு, கடத்தல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் பதிவு செய்ய ’பிளாக் செயின்’ என்ற தொழில்நுட்ப முறையையும் தமிழக கடத்தல் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் பிரிவானது, வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்து அந்தந்த கோவில்களில் ஒப்படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இது ’எம்லாட்’ எனும் சட்ட நடவடிக்கை மூலம் நடத்தப்படுகிரது.

மாயமான சிலைகள்

திருவாரூரில் அமைந்துள்ள கடுவன்குடி கைலாசநாதன் கோவிலில் இருந்து 2 கோடி மதிப்பிலான திரிசூல மங்கள பத்ரகாளி சிலை, மற்றும் 4 கோடி மதிப்பிலான நந்தி கற்சிலை , தஞ்சை மாவட்டம் அருள்மிகு நாகநாதசாமி கோவிலில் 2 கோடி மதிப்பிலான 6 தலைகள் கொண்ட ஸ்கந்த கார்த்திகேயன் சிலை மாயமானது.

900 ஆண்டு பழமையான சிலை

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் அருள்மிகு நாரீச்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 900 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

ராஜேந்திர சோழன் வழங்கிய சிலை

இந்த கோவிலுக்கு ராஜேந்திர சோழன் வழங்கிய நாயனார், சுந்தரர் பறவை சிலை காணாமல் போனதாக 1972 ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.

அதேபோல், தஞ்சை ஆலத்தூர் கிராமத்தில் 13 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஸ்வநாதர் ஸ்வாமி திருக்கோவிலில் சோமஸ்கந்தர் சிலை மாயமானது.

வெளிநாடுகளில் தேடுதல் வேட்டை

இந்த சிலைகள் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்ட நாள்முதல் சிலை கடத்தல் பிரிவினர், வெளிநாடுகளுக்கு இந்த சிலைகள் கடத்தப்பட்டனவா ? யார் கடத்தி இருப்பார்கள்? வெளிநாட்டு அருங்காட்சியங்களில் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களின் இணைய தளங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நேஷ்னல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா

இந்த தேடுதல் பணியின் போது, திருவாரூர் மற்றும் தஞ்சையில் காணாமல் போன சிலைகள் ஆஸ்திரேலியாவின் நேஷ்னல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

வாஷிங்டன் டிசி. ப்ரீர் சேக்லர் மியூசியம்

அதேபோல் ராஜேந்திர மன்னலாம் வழங்கப்பட்ட சிலைகள், மற்றும் சோமஸ்கந்தர் சிலை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி. ப்ரீர் சேக்லர் மியூசியம் என்ற அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதைத்தோடர்ந்து இந்த ஐந்து சிலைகளையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளை சிலை கடத்தல் பிரிவினர் மேற்கொண்டனர்.

சிலைகளை திரும்ப வழங்க ஒப்புதல்

இதற்காக அந்த சிலைகளின் அளவு,உயரம், அகலம் முதலான சிலைகளுக்கான ஆதாரங்களை ஆச்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பி உறுதி செய்தனர்.

சிலைகளை திரும்ப வழங்குவதாக தற்போது ஆஸ்திரேயா மற்றும் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளன.

தமிழகத்திலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் ஏலம் விடப்பட்ட இந்த ஐந்து கோடி மதிப்புள்ள ஐந்து சிலைகளும் உரிய நடவடிக்கைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு, சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்கப்படும் என்று தமிழக சிலை கடத்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in