'ஆயுஷ்' மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகள் : ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்!

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மற்றும் BNYS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 மாலை 5 மணி கடைசி நாளாகும்.
July 31 at 5 PM is the last date to apply for Siddha, Ayurveda, Homeopathy, and BNYS courses in Tamil Nadu
July 31 at 5 PM is the last date to apply for Siddha, Ayurveda, Homeopathy, and BNYS courses in Tamil Naduai
1 min read

July 31 at 5 PM is the last date to apply for Siddha, Ayurveda, Homeopathy, and BNYS courses in Tamil Nadu. Here are the full details.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கிய விண்ணப்பப் பதிவு

2026-27-ஆம் கல்வி ஆண்டிற்கான இந்த இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூலை 13-ஆம் தேதி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதமான www.tnayushselection.org-ல் தொடங்கியது.

ஆயுஷ் படிப்புகள் (BSMS, BAMS, BUMS, BHMS)

  • நீட் (NEET) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

  • இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS)

  • பிளஸ் 2 (12-ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் (நீட் தேர்வு தேவையில்லை).

  • இப்படிப்பிற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு பொருந்தாது.

  • இதுவரை 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் www.tnayushselection.org என்ற இணையதள முகவரி வாயிலாக ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மானவர்களுக்கு அறிவிறுத்தல்

கடைசி நேரத்தில் விண்ணப்ப பதிவு செய்யாமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பதின் காரணமாக தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்த்து எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: டெல்லியில் பெண்களுக்கான 'லட்சுமி யோஜனா' திட்டத்திற்கு ஒப்புதல் : மாதம் ரூ.2,500 உதவித்தொகை அறிவிப்பு!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in