ாற்றில் கலைந்தார் இயக்குநர் பாக்கியராஜ்
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ,மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இறப்பை உறுதி செய்த இயக்குநர் பார்திபன் மற்றும் சுஹாசினி
செய்தியாளர்களை சந்தித்த பார்திபன் மற்றும் சுஹாசினி வழக்கம் போல காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும், மாரடைப்பு ஏற்புட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு அவரின் உயிர் பிரிந்துள்ளது என்று உறுதி படுத்தியுள்ளனர்
தமிழ் சினினாவில் தனக்கென அடையாளத்தை அமைத்து கொண்டவர்
சாதாரண வாழ்வியலை தன் திரைக்கதை மூலமாக தனக்கென தனியான இடத்தை பதித்திருந்தவர் இயக்குநர் பாக்யராஜ்.
முன்னணி இயக்குநருடன் இணைந்து பணியாற்றியவர்
சினிமா துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக திரையுலகில் முன்னணி இயக்குநர்களான ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரின் உதவி இயக்குநராக தனது வாழ்வியலை 1977-ல் தனது திரைப்பயணத்தை அவர் தொடங்கினார்.
குருவான பாரதிராஜாவுடன் பணியாற்றிய பாக்கியராஜ்
தனது குருவான பாரதிராஜாவுடன் ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். கிழக்கே போகும் ரயில் மற்றும் டிக் டிக் டிக் படங்களுக்கு பாரதிராஜாவுடன் இணைந்து கதை எழுதினார். சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியவர்,
பெண் கதாப்பாத்திரத்திர்கு முன்னுரிமை, இயல்பு வாழ்வியலை திரையில் காட்டியவர்
இயக்குநராக பணியாற்றிய பாரதிராஜா ,அவரது படங்களில் பெண் கதாப்பாத்திரத்திற்கு வசனம் மூலமாக முதன்மை இடத்தை கொடுத்தவர் , இயல்பான மக்களின் வாழ்வியலை மாறாமல் திரையில் காட்டியவர் பாக்கியராஜ்
கதாநாயகன், இதழ் ஆசிரியர்
சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிய அவர், தனது படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஹிட் படங்களை கொடுத்து, நடிகருக்கான கட்டமைப்பை உடைத்தவர்
இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, இது நம்ம ஆளு, அவசர போலீஸ் 100, ராசுக்குட்டி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,
சொக்கத்தங்கம், சித்து +2 உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். குறிப்பாக நடிகருக்கான உடல் கட்டமைப்பு உடைத்தெறிந்து அதனை திரையில் காட்டியவர்
பாக்யா இதழின் ஆசிரியராகவும், இசை அமைப்பாளராகவும் பணியற்றியவர்
திரைத்துறை மட்டுமல்லாது , இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் , குறிப்பாக பாக்யா ’ என்று வார இதழை தொடங்கி , அதன் ஆசிரியராகவும் பணியாற்றியவர் திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்து, பாடலும் பாடி உள்ளார்.
‘திரைக்கதை மன்னன் மக்களிம் மனதில் நீங்க் இடம் பிடித்தவர்
‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்பட்டு தமிழக மக்களின் மந்தில் நீங்க இடம் பிடித்தவர் ,பாக்யராஜின் படங்கள் ஜனரஞ்சகமாக இருக்கும். கதை, வசனங்கள், காமெடி என அவரது படங்கள் கவனம் ஈர்க்கும். சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர்..
தமிழக அரசியலிலும் கால்பதித்தவர்
தனது சினிமா பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றிக்கும் பாக்கியராஜ் , தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் இணைந்து அவர் பணியாற்றி உள்ளார். குறிப்பாக அதிமுகாவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர்
பல்வேறு இயக்குநர்களை உருவாக்கியவர்
தமிழ் திரையுகில், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோரை பாக்யராஜின் உதவி இயக்குநர்களாக தன்னுடைய படத்தில் இணைத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
==================