Annamalai : இவர் அனைவருக்குமான முதல்வரா? : அண்ணாமலை கேள்வி?

Annamalai Criticized DMK on Thiruparankundram Deepam Issue : திமுக அரசு மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
BJP Ex President Annamalai Criticized DMK Government on Thiruparankundram Karthigai Deepam Issue Case Latest News in Tamil
BJP Ex President Annamalai Criticized DMK Government on Thiruparankundram Karthigai Deepam Issue Case Latest News in TamilGoogle
2 min read

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

Annamalai Criticized DMK on Thiruparankundram Deepam Issue : அண்ணாமலை எக்ஸ் பதிவு நீதிமன்றம் தடை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத மோதலில் ஏற்படுத்தும் முயற்சியில் திமுக அரசு இறங்கியுள்ளது.

1920ல் தெளிவான தீர்ப்பு

1920 ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தர்ஹா, நெல்லித்தோப்பு எங்கு உள்ளது. இங்கிருந்து தர்ஹாவுக்கு இணைக்கும் படிகற்கள் எங்கு உள்ளது என்பது குறித்து தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதான் முஸ்லிம்கள் கையில் உள்ளது. மற்றது எல்லாம் மலை முழுவதும் ஹிந்துக்களுக்கு சொந்தம் என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ரகுபதி தவறான வாதத்தை வைக்கிறார்

தவறான வாதம் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டும் என்றே பொய் சொல்லியுள்ளார். நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்துள்ளார் என ரகுபதி தவறான வாதத்தை வைக்கிறார். தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

மேல்முறையீட்டில் தவறு

இதனை எதிர்த்து செயல் அலுவலர் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுவும் சரியாக செய்யவில்லை. செயல் அலுவலரை திமுக அரசு தூண்டிவிட்டு மேல்முறையீடு செய்ய வைத்துள்ளது. வக்பு போர்டு, தர்ஹா தரப்பில் இன்று முறையீடு செய்துள்ளனர் .

2ம் தேதி செயல் அலுவலர் முறையீடு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அவரது கடமை கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மோசடி

மோதல் போக்கு திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மோசடி என நீதிபதிகள் அமர்வு கண்டுபிடித்தனர். நயினார் நாகேந்திரன், எச்.ராஜா தீபம் ஏற்ற சென்ற போது, சட்டவிரோதமாக தடுத்துள்ளனர்.

தொண்டர்களை், தலைவர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. நீதிபதி தீர்ப்புக்கு எதிராக, சட்ட விரோதமாக இரண்டு மோதல்போக்கை திமுக அரசு கடைபிடித்துள்ளது.

பக்தர்களுக்கு எதிரான அரசியலை திமுக செய்கிறது

சிக்கந்தர் மலை என பெயர் வைத்ததையும் , நெல்லித்தோப்புக்கு சென்று ஆடு, கோழி வெட்டுவோம் என சொல்வதையும் திமுக அரசு ரசித்தது.

இதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவில்லை. பக்தர்கள் மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றனர். இன்று தர்ஹா செய்ய வேண்டிய வேலையை கோயில் செயல் அலுவலர் செய்கிறார்.

ஆனால், அன்று ஆடு கோழி வெட்டுவோம் எனக்கூறிய போது செயல் அலுவலர், தமிழக அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை, சிக்கந்தர் மலை பெயர் வைக்கலாம் என ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

ஆனால், ஒரு தலைபட்சமாக ஹிந்துமதத்தை நம்பும் பக்தர்களுக்கு எதிராக உச்சபட்சமாக திருப்திபடுத்தும் அரசியலை திமுக செய்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், சட்டப்பிரச்னை கோவை, சென்னை, தஞ்சாவூர், அரியலூர், மேட்டுப்பாளையம், பெரம்பலூர் உள்ளிட்ட1 61 கோவில்களை இடித்தது. மாலை நீதிமன்றம் உத்தரவு அளித்ததும், அதிகாலை 2 மணிக்கு இடித்தனர். அன்றைக்கு நீதிமன்றம் தேவைப்பட்டது.

ஆனால், தீபத்தூண் என்று சொன்ன போது நீதிமன்றம் தேவையில்லை. ஒரு தலைபட்சமாக 161 கோவிலை இடித்துவிட்டு, நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற மாட்டோம் என சொல்லி பெரிய சட்டப் பிரச்னையை உருவாக்கிவிட்டு பார்லிமென்டில் பேசுகின்றனர். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய சட்டத்துறை அமைச்சர் பழைய தீர்ப்புகளை திரித்து பேசுகிறார்.

இவர் அனைவருக்குமான முதல்வரா

மதுரை நகரை அல்லோலபடுத்திவிட்டு, முதல்வர், மதுரைக்கு என்ன தேவை. வளர்ச்சி அரசியலா அல்லது ... அரசியலா? என டுவிட் போட்டுள்ளார்.

இது முதல்வர் போடும் டுவிட்டா? இதனை சின்ன குழந்தைகள் போட்டால் ஏற்றுக் கொள்ளலாம். முதல்வர் போடும் டுவிட்டா? முதல்வர் தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் டேஷ் என போட்டுள்ளார்.

அப்படி என்றால் என்ன? அதனை முதல்வர் தானே சொல்ல வேண்டும்.சிறுபிள்ளைதனமான பிரச்னைகளை செய்துவிட்டு, இந்த பதிவை போடுகிறார் என்றால், அவர் அனைவருக்குமான முதல்வரா.?இவர் அனைவருக்குமான முதல்வரா?. இவர் ஹிந்துக்களுக்கான முதல்வரா? முஸ்லிம்களுக்கான முதல்வரா? கிறிஸ்தவர்களுக்கான முதல்வரா என கேள்வி எழுகிறது என்று விமர்சித்துள்ளார்.

நீதிமன்றம் சொல்வதை முதல்வர் பின்பற்றவில்லை

அறிக்கை நீதி நிலைப்பாடு, நீதிமன்றத்தில் சொல்லும் போது முதல் கடமையாக செய்ய வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. சிஐஎஸ்எப் அமைப்பை அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நீதிமன்றம் சொல்வதை முதல்வர் பின்பற்றவில்லை. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளோம்.

இவ்வளவு தவறுகளை செய்துவிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். நிதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in