

செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்
Nainar Nagendran Criticized DMK : சென்னை கிண்டியில், பாஜ உயர்மட்டக்குழு கூட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது. இந்த கூட்டத்திதற்கு பின் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனது யாத்திரை சென்று கொண்டு இருக்கிறது. ஜன.9ம் தேதி யாத்திரை முடிகிறது. பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் நேரம் கேட்டு அழைப்பதாக முடிவு எடுத்துள்ளோம். நாளைய தினம் தேர்தல் வைத்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். 5ஆண்டுகால திமுக ஆட்சியில், சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்
மேலும், மாதம்தோறும் மின் கணக்கீடு என்பதை இன்னமும் நிறைவேற்றவில்லை. 7000த்திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறதுது. 10 வயது சிறுமி முதல் 70 வயது வயதானவர்கள் வரை ரோட்டில் நடமாட முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் நசுங்கி பலியாகி உள்ளனர். எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை பொருட்கள் நடமாட்டம் இருக்கிறது. இதை எல்லாம் விட்டுவிட்டு இந்த ஆட்சியை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்? தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டிச. 23ம் தேதி வருவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.