உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்த நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran on Udhayanidhi : தமிழக ஆளுநரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran Warns Udhayanidhi Stalin Remarks on TN RN Ravi News in Tamil
Nainar Nagendran Warns Udhayanidhi Stalin Remarks on TN RN Ravi News in Tamil
1 min read

நயினார் நாகேந்திரன் பதிவு

Nainar Nagendran on Udhayanidhi Stalin : அவர் விடுத்துள்ள பதிவில், தான் வகிக்கும் பதவிக்குரிய பொறுப்பின் மீது துளியும் அக்கறையில்லாத உதயநிதி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கவர்னரை அடிப்படையின்றி விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தைத் திசைதிருப்ப இந்தி திணிப்பு, மதவாதம் என்று வாய்க்கு வந்ததைக் கூறும் முன், தேசிய கல்விக் கொள்கையில் ‘இந்தி கட்டாயம்’ என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என திமுகவால் காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி மாண்பை புரிந்து கொள்ள வேண்டும்

இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என சத்தியம் செய்ய முடியுமா? ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட உதயநிதி முதலில் இந்திய அரசியலமைப்பின் மாண்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

அரசியலமைப்பு சாசனப்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, எச்சரிக்கிறேன் என்று கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், திமுகவின் நிர்வாக சீர்கேடால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, ஊழல், முறைகேடு, பெருகும் போதைப் புழக்கம் ஆகியவற்றை எதிர்த்துதான் தமிழகம் போராட வேண்டும், போராடிக் கொண்டும் இருக்கிறது. கூடிய விரைவில் அந்தப் போராட்டத்தில் தமிழகம் வெல்லும் என்றும் புதிய ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : விஜய் டிஜிபியிடம் மனு அளித்து கரூர் செல்ல வேண்டியதில்லை- அண்ணாமலை!

நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

எனவே, எஞ்சியிருக்கும் 7 மாதங்களில் ஆளுநரை அடிப்படையின்றி விமர்சிக்காமல், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in