
கரூர் பிரச்சாரம் :
BJP Leaders Condolences To Karur Stampede Death : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டதில் ஏற்பட்ட 40 உயிரிழப்பிற்கும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய் வரை தங்களுடைய துயர நிதியை இறந்தவர்களுக்கு அறிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் :
இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில்(Nainar Nagendran on Karur Death), மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சகோதர, சகோதரிகள் பூரண நலத்துடன் திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அத்துடன் 2 நாட்களுக்கு பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை உச்சநீதிமன்றம் விசாரனை செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா :
இவரைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா(H Raja on Karur Death), ஒரு கூட்டம் நடக்குதுனா இரண்டு பேருக்கும் பொறுப்பு, கூட்டம் நடத்துவர்களுக்கு, காவல்துறைக்கும், அரசாங்கத்திற்கும் உள்ளதாக தெரிவித்தார். மேலும், எப்படி தவறு ஏற்பட்டது, அதன் பின்னனி பற்றி உள்த்துறை அமைச்சர் அமித்ஷா மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : Karur Death : உயிரிழப்பிற்கு விஜய் செய்தது என்ன? முழு விவரம் இதோ!
உயிரிழந்த குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் விரைந்து குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றும் அவர் கூறினார்.கரூர் தவெக கூட்ட நெரிசல்(Karur Stampede Death) சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என கேட்டு கொண்ட அவர், கூட்ட நெரிசலின் போட்டோ, வீடியோவை கைப்பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.